பெண்களின் உதடுகள் சிவப்பாக இருப்பது ஏன்?



ஏன்?எதற்கு?எப்படி?

பெண்களின் சுளையான செக்கச்செவேல் உதடுகளைப் பார்த்த வுடனே ஆண்களின் உடலில் ஏறும் குபீர் டெஸ்டோஸ்டிரோன் கிளுகிளுப்பை 1960ஆம் ஆண்டு உயிரியலாளர் டெஸ்மாண்ட் மோரிஸ் அநியாயத்திற்கு  நம்பினார். செக்ஸ் நினைவுகளால் பெண்களின் பிறப்பிறுப்பில்  பொங்கும் ரத்த ஓட்டம்தான்  உதட்டைச் சிவப்பாக்குகிறது  என  லாஜிக்  உடைத்து பேசினார்.

மோரிஸ் கான்செப்ட் பின்னாளில் போணியாகவில்லை. பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் உதடும் கூட சிவப்புதானே! உள்ளிருந்து மலருவதால் மெல்லியதாக சிவப்பாகவும் உள்ளது என 2012 கென்ட் பல்கலைக்கழக ரிசர்ச்  சொல்கிறது. உதடுகள் சிவப்போ கருப்போ, வாய் மூடி இருந்தாலும் பொருட்களை சுவைக்க, உறிஞ்ச, பச்சக் என இச் வைக்க, உதடு சுழித்து  எரிச்சலைக் காட்ட  என  எக்கச்சக்க பயன்பாடு உதடுகளுக்கு மட்டுமே உண்டு பாஸ்!

Mr.ரோனி