செம சூடு பாஸ்தா!



உணவகங்களில் பாஸ்தா மற்றும் பிரட் வகைகளை உயர்வெப்பநிலையில் சமைத்து பக்குவப்படுத்துகிறார்கள்.  இதனை   மெய்லார்ட்   ரியாக்‌ஷன்  என்கிறார்கள்.வேதியியலாளர் லூயிஸ் கேமில் மெய்லார்ட், சிலவகை உணவுகளை 300-350  பாரன்ஹீட்டுக்கு மேல் சமைத்தால்  அதிலுள்ள புரதம் மற்றும் சர்க்கரை வேறுவடிவத்திற்கு மாறி நிறம், சுவை,  நறுமணம்  கூடுவதை  திட்டவட்டமாக  நிரூபித்தார்.

சமையல் துறையினரும் இதை ஏற்க, வெரைட்டி ரெசிப்பிகள் சுவை, மணம், திடம் என மைக்ரோவேவ்  ஓவனில்  தூள்  கிளப்ப ஆரம்பித்தன. முதலில் ஓவனை ஆன் செய்து, அதில் கைபொறுக்கும் சூடு இருக் கிறதா என பொருளை டெஸ்ட் செய்வார்கள். 30  செகண்டில்  சூடு பொறுக்கமுடியாமல்  கை எடுத்து விட்டால் போதுமான சூடில்லை என்று அர்த்தம்.

இன்று  சில பாஸ்தா வகைகள் 400 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் சமைக்கப்படுகின்றன. 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் என்பது உணவில் ஒரு கோல்டன்  ரூல்;  அவ்வளவுதான்.  அதற்காக  பருப்புக் குழம்பு, ரசம் என  ஓவனில்  வைத்து  முழக்கி கரியாக்கினால் அதற்கு  கம்பெனி பொறுப்பில்லை.