கடலில் வைரஸ்!



எம்ஐடி மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு செய்த ஆய்வில் கடல்நீரில் புதியவகை வைரஸ் உற்பத்தியாகி பரவி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். பாக்டீரியாவுக்கு முக்கிய எதிரியான வைரஸ்,  கடலில்  பரவி  ஆதிக்கம் செலுத்துவது பற்றி  தீர்க்கமாகத் தெரியவில்லை. கடலில்  கண்டுபிடிக்கப்பட்ட வாலற்ற வைரஸ் Autolykiviridae என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிரீக் புராணப்படி, பிடிபாத கடினமான விலங்கின் பெயர் இது. குறிப்பிட்ட பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ் என் பதைத் தாண்டி இந்த  புதிய வைரஸ் நிறைய பாக்டீரிய இனங்களை குறிவைத்து தாக்கி அழிக்கிறது.” ஒரு மில்லிமீட்டர் நீரில் பத்துமில்லியன்  வைரஸ்கள் உண்டு. லேபில் உள்ள வைரஸ் களின் அமைப்பில் உள்ள வால், கடல் நீரில்  இருப்பதில்லை.

இவற்றின் அமைப்பும்  முற்றிலும் வேறுபட்டது. மரபணுவும் கூட சிறியது” என்கிறார் ஆய்வாளர் மார்ட்டின் போல்ஸ். முதலில் விப்ரியோ எனும் பாக்டீரியா வகையைத் தாக்கிய  இந்த  வைரஸ் பின்னர் பல்வேறு பாக்டீரியா இனங்களைத் தாக்கியது  ஆய்வாளர்களின் வைரஸ்  பற்றிய அறிவை புதுப்பிக்கக் கோரியுள்ளது.