கனடாவின் கண்காணிப்பு!அமெரிக்காவில் நிகழும் பத்து மரணங்களில் ஒன்று தற்கொலை. அதிலும் 10-19 வயதுகளில்  நிகழும்  தற்கொலைகளில் உலகளவில்  கனடாவுக்கு  இரண்டாமிடம்.  தற்கொலை சதவிகிதம்  அதிகமுள்ள 60 நாடுகளில் 28 நாடுகள் தற்கொலையை கட்டுப்படுத்துவதற்கான  திட்டங்களை அறிவித்துள்ளன.

அண்மையில்  கனடா அரசு சோஷியல்  தளங்களை  ஏஐ  மூலம்  கண்காணிக்க  ஒட்டாவா நகரைச்சேர்ந்த டெக் நிறுவனத்தை நியமித்துள்ளது. தற்கொலையைத் தூண்டும் செய்திகள், தன்மையை ஆய்வு செய்து கூறுவதே இந்நிறுவனத்தின் பணி.

‘‘ஆய்வில் பொதுவாக வைரலாகும் ட்ரெண்ட்ஸ் விஷயங்களின் தாக்கம் பற்றிய ஆய்வே சரியானது. குறிப்பிட்ட ஒருவரின் தகவல்களை சேகரிப்பது பிரைவசி சிக்கலை ஏற் படுத்தும்”  என்கிறார் டெக் நிறுவனத்தைச் சேர்ந்த எரின் கெல்லி. பொது சுகாதார ஏஜன்சி PHAC இதற்கான திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.