பிட்ஸ்!



ரொமான்டிக் பறவைகள் என்றால் அது கார்டினல்கள்தான். இணைசேர்ந்தபின் ஒன்றாக  இரை தேடுவது,  பிரியாமல்  உட்கார்ந்திருப்பது, கூவுவது,  ஒன்றுக்கொன்று  உணவூட்டுவது என கார்டினல் பறவைகளின் அழகு அள்ளும். தனக்கேற்படும் துயரமான வேதனையை சிரித்துக்கொண்டே பொறுத்துக்கொள்வதற்கு Ecce- dentesiast   என்று பெயர்.

கிரேக்கத்தைச் சேர்ந்த இரண்டாம் பரோவா ரமேசஸ் என்பவருக்கு 1984 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது. மன்னரான ரமேசஸ் இறந்து 3,197 ஆண்டுகள் ஆன பின், அவரது உடலை பதப்படுத்த  பிரான்ஸ் கொண்டு செல்லவே இந்த பாஸ்போர்ட். எத்தியோப்பிய  விமானம்  கடத்தப்பட்டு சுவிட்சர்லாந்து சென்றது.

அதைக்காப்பாற்ற பிரஞ்சு இத்தாலி  போர்  விமானங்கள் தான் உதவிக்கு வந்தன. ஏன்? ஸ்விட்சர்லாந்து போர்விமானங்கள் இரவுகளிலும், வீக் எண்ட்களிலும்  இயங்குவதில்லை.1934 ஆம் ஆண்டு ஹிட்லர் அதிபராக இருந்தபோது,  அவரின் கீழிருந்த வருவாய் துறையால் வரி ஏய்ப்பு குற்றஞ் சாட்டப்பட்டார். பின்னர் அதிலிருந்து சாதுரியமாக  விதிவிலக்கு பெற்றார் ஹிட்லர்.