நீரின்றி மனிதன்...?



நீரின்றி ஏழு நாட்கள் தாக்கு பிடிக்கலாம் என்பதே பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் பதில். துல்லிய தரவுகள் இதில் கிடைக்கவில்லை. ஒருவர் உயிர்பிழைப்பு தன்மை, அவரின் ஆரோக்கிய உடலமைப்பு,  தட்பவெப்பநிலை  ஆகியவையும்   இதில் முக்கிய அம்சங்கள் என்கிறது அமெரிக்காவைச்  சேர்ந்த  மாயோ கிளினிக் ஆராய்ச்சி அமைப்பு.

“மிக வெப்பச்சூழலில் ஒரு வரின் உடல் 1.5 லிட்டர் நீரை வியர்வையாக வெளியேற்று கிறது” என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  தாவரவியலாளர் ராண்டல் பேக்கர். “தடகளப்பயிற்சியில் ஒருவர் இருந்தால் வெப்பச்சூழ் நிலையில்  நீரிழப்பு   துரிதமாகி மரணம் சில மணி நேரத்தில் நிகழக் கூடும். 

காய்ச்சல்  நோயாளிகள் உடலின்  உள்ளுறுப்பு வெப்பம் காரணமாகவும், டிமென்ஷியாவால்   பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் குடிக்க மறந்தும்  பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை  நெருங்குவார்கள்” என்கிறார் பேனர் தண்டர்பேர்ட்  மருத்துவ மையத்தின் சிகிச்சை மருத்துவர் கர்ட் டிக்‌ஸன். தன் உடல் எடையில் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக  நீரிழப்பு  ஏற்பட்டால்  அபாயம்  என  வரையறுக் கிறது  இங்கிலாந்தின்  தேசிய  ஆரோக்கிய சேவை அமைப்பு (2009).