கேத்தரின் மில்லர்தலைவன் இவன் ஒருவன் 30

அமெரிக்காவிலுள்ள ஜேம்ஸ் பியர்டு பவுண்டேஷனில் பணிபுரியும்  கேத்தரின் மில்லர்,  செஃப்களை  ஒன்றிணைத்து  ஆரோக்கிய  உணவுகளைத்  தயாரிக்க வலி யுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். “சமையல் குறித்த கருத்துகளை மக்களிடம் பேச விரும்பினால், உங்களுக்கு சமையல் டெக்னிக்குகள் நன்றாகத் தெரிந்திருப்பது அவசியம்” என்கிறார் கேத்தரின்.

உள்ளூர் உணவுவகைகளைப் பிரபலப்படுத்த செஃப்களுடன் இணைந்து செயல்படுவது, நாஷ்வில்லே மேயர் மேகன் பேரியுடன் இணைந்து உணவு வீணாவதைத் தடுக்கும் உணவு சேமிப்பு சவால் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திய  துணிச்சல்  பெண்மணி   கேத்தரின். “அமெரிக்கர்கள் தாங்கள் சாப்பிடும் உணவு பற்றி ஹோட்டல்காரர்களுடன் பேச வேண்டிய நேரமிது” என கவனமாகப்  பேசுகிறார் கேத்தரின்.
 
தன்னார்வ லாப நோக்கற்ற நிறுவனமான ஜேம்ஸ் பியர்டு பவுண்டேஷன் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உணவு  வல்லுநர்களை ஊக்குவித்து உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. “உணவு வகைகளை உருவாக்குவதில் ரெஸ்டாரண்ட்டுகளும் செஃப்களும் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களின் விழிப்புணர்வே மக்களின் ஆரோக்கியம் காக்கும்” என பொறுப்பாக பதில் பேசும் கேத்தரின் மில்லர், செஃப்  ஆக்‌ஷன் நெட்வொர்க் அமைப்பின்  நிறுவனரும் கூட. 

தரமான உணவை சரியான விலையில் பெறுவது  உணவுக்குப்பைகளையும்  குறைக்கும்  என்பதால், அதற்கான செயல் பாடுகளைத்  தொடங்குவது  கேத்தரினின் லட்சியம். “நல்லுணவு அனைவருக்கும்  கிடைக்கும்படி  அவர்கள்  வாங்கும் விலையில்  தருவது  இதற்கு  சிறந்த  தீர்வு. குடும்பத்தில் பல்வேறு முடிவுகளை  பெண்களே எடுப்பதால் அவர்களை  இவ்வகையில் அணுக முயற்சிக்கிறோம்” என புன்னகை மிளிர பேசுகிறார் கேத்தரின். 

உணவுத்துறையிலுள்ள செஃப்களுக்கு ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புணர்வு அளிப்பதை தன் ஆயுள் லட்சியமாகக்  கருதும் கேத்தரின்  அதனை  ஜேம்ஸ் பியர்டு அமைப்பின் மூலம் பலருக்கும் பரப்ப உழைத்து  வருகிறார். “புகழ்பெற்ற அமைப்பில் பணி புரிய  கிடைத்த   வாய்ப்பு  பெரிய  அதிர்ஷ்டம். தற்போது  இதில்  இணைந்துள்ள செஃப் களின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதன் வழியே ஆரோக்கியமான அடுத்த தலை முறையை உருவாக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது” என விடை தருகிறார் கேத்தரின்.

பகதூர் ராம்ஸி