ராஹ்வா கிர்மத்ஸியான்



தலைவன் இவன் ஒருவன் 13

சூடானிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பஃபலோ நகருக்கு அகதியாக இடம்பெயர்ந்து அங்கு தம் மக்களுக்கான வீடுகள் அமைத்துத் தரும் சமூக செயல்பாட்டாளர்.   சூடானின் எரிட்ரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப்போரினால் அமெரிக்காவின் பஃபலோ நகருக்கு தன் எட்டு வயதில் இடம் பெயர்ந்து வசிக்கத் தொடங்கிய ராஹ்வா, பஃபலோ நகரின் பள்ளி மற்றும் பல் கலையில் பட்டம் பெற்றார். தம் இனக்குழு சார்ந்த அமைப்புகளின் செயல்பாட்டில் பதிமூன்று வயதிலிருந்தே ஈடுபட்டு வருபவர் இவர்.

“எண் பதுகளில் நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தோம். இங்குள்ள பள்ளிகளுக்கு சென்றால், 60 மொழிகள் உங்கள் காதுகளுக்கு கேட்கும்” என புன்னகைக்கிறார் ராஹ்வா. 6 லட்சம் மக்கள் வசிக்கும் கட்டமைப்பு கொண்ட பஃபலோ நகரில் தற்போது வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரம்.  

2005 ஆம் ஆண்டு PUSH அமைப்பு தொடங்கிய ஏழு ஆண்டுகளில் 75 க்கும் மேற்பட்ட  வீடுகளை சூழலுக்கு இசைவான முறையில் மக்களுக்கு  கட்டி  வழங்கியது ராஹ்வாவின் தலைமைத்துவ சாதனை.

“தரமான பள்ளிகள், பொருளாதார வாய்ப்பு, பாதுகாப்பான வீடுகள் ஆகியவற்றை மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதே லட்சியம்” என்று ஆர் வமாக பேசும் ராஹ்வா, தன் நிறுவனத்தில் 70 பேர்களுக்கும் மேல் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்து அகதி மக்களுக்கிடையேயுள்ள மனத்தடைகளையும் தகர்த்தெறிந்திருக்கிறார்.

விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் என தொடர்ந்து மக்கள் தம் கருத்துகளை  பிரச்னைகளை  வெளிப்படையாகக் கூறுவதற்கான வாசலாக பல்வேறு நிகழ்வுகளை PUSH நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. 

மாணவ மாணவிகளுக்கான தொழில் திறன், ஆளுமை வகுப்புகள், கணினி பயிற்சிகள், நூலகங்கள், படைப்புத்திறன் வகுப்புகள், சைக்கிள் பயிற்சி என மாணவர்களின் திறமைகளுக்கான அத்தனை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதற்கான செயல்பாட்டில் ராஹ்வா சற்றும் தளராத  தங்கப் பெண்மணி. 

மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டித்தருவதோடு, வாடகை வீடுகளையும் அமர்த்தித் தந்து அதில் மின்சாரத் தேவைக்கு 500 க்கும் மேற்பட்ட சோலார் பேனல்களை நிறுவிய தொலைநோக்குப் பார்வை, ராஹ்வாவை  தன்னிகரற்ற  தலைவராக   முன்னிறுத்து
கிறது. புஷ்  தனது  சூழல் திட்டங்களுக்கு  சூழல் பாதுகாப்பு  அமைப்பின் (EPA)  நிதியைப்பெற்றாலும் பெரும்பாலும் தனி நபர்களின் நன்கொடைகளைச் சார்ந்தே ராஹ்வாவின் புஷ் மற்றும் அதன் சகோதர நிறுவனங்களும் இயங்குகின்றன.

பகதூர் ராம்ஸி