ஓரிகாமி ரோபோ!



ஓரிகாமி ரோபோ மெட்டல், பிளாஸ்டிக் ஷீட்டுகளில் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவை நடக்க, குதிக்க ஏன்- நீந்தக்கூட முடியும் என்றாலும் பிராக்டிக்கலாக பெரிய உபயோகமில்லை. தற்போது அடுத்த அப்டேட்டாக அமெரிக்காவின் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள்(CSAIL) origami exoskeletons மூலம் திரும்ப வந்துள்ளனர்.

ஓரிகாமி எக்‌ஸோஸ்கெலிட்டன்களில் காந்த க்யூப் வைத்து அதனை இயக்குவது இதில் புதுசு.”ஓரிகாமி ரோபோக்களை பல்வேறு டாஸ்க்குகளை செய்யுமாறு உருவாக்குவதே எங்களது எதிர்கால லட்சியம்” என்கிறார் ஆராய்ச்சியாளரான டேனியலா ரஸ்.

ஆழ்கடல் பணி, விண்வெளியில் குடியேற்றம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளுக்கு  ஓரிகாமி ரோபோக்களை பயன்படுத்த முடியும். “சாப்ட்வேர்களை அப்டேட் செய்வது போல முழு ரோபோக்களையும் அப்டேட் செய்வோம்” என உற்சாகமாகிறார் டேனியலா.