ஆலிவ் ஆயிலில் உரம்!



ஆலிவ் ஆயிலை தயாரிக்கும்போது ஆயில் மட்டுமல்ல, அதில் கழிவுநீரும் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆலிவ் ஆலைகளிலிருந்து ஆண்டிற்கு 80 ஆயிரம் காலன்கள் கழிவு நீர் உருவாகி வெளியேறுவதால் நிலம் மாசுபடுகிறது.

தற்போது இதனை எரிபொருளாக, உரமாக, நன்னீராக மாற்ற முடியும் என கண்டறிந்துள்ளது பிரான்சின்  முல்ஹவுஸ்  இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளரான மெஜ்டி ஜெக்குரிமின் டீம்.

ஆலிவ் எண்ணெய் கழிவு நீரோடு, cypress sawdust என்ற பொருளைச் சேர்த்து காய வைத்து நீர் ஆவியாகும்போது தூய நீர் கிடைக்கும். மீதமுள்ள பொருட்களை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் வாயுவை உயிரிஎரிபொருளில் பயன்படுத்தலாம்.

பைரோலிசிஸ்  முறையில் பொட்டாசியம், பாஸ் பரஸ், நைட்ரஜன் ஆகியவை   உருவாவதால், கழிவை உரமாகப் பயன்படுத்தலாம். இதுகுறித்த ஆய்வு ACS Sustainable  Chemistry  &  Engineering என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.