நோபல் பரிசு விஞ்ஞானிகள்!



அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ்,  மைக்கேல்  டபிள்யூ யங் ஆகியோர் மருத்துவப் பிரிவில்  நோபல் பரிசுக்காக தேர்வாகி சாதித்துள்ளனர். மனிதர்களின் உடலில் உயிரியல்  கடிகாரத்தை  இயக்கும் மூலக்கூறு இயக்கத்தைக்  கண்ட றிந்ததற்காக இம்மூவருக்கும் நோபல்  பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது.

“தாவரங்கள், விலங்குகள் ஆகியவை உயிரியல் சுழற்சி  மூலம்  பூமியின்  பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாறுகின்றன என்பதைக்   கூறும்  கண்டுபிடிப்பு”  என்கிறது நோபல் கமிட்டி அறிக்கை.

1901 லிருந்து வழங்கப்பட்டு  வரும் நோபல்விருதினை 211 விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். தில் பெண்களின் பங்கு 12. (இயற்பியல் பரிசு வென்ற நோபல் பெண்மணிகள் மேரி க்யூரி, மரியா கோபர்ட் மேயர்).