ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம்!ஆஸ்திரேலியா, வளர்ந்த நாடாக இருந்தாலும் அதற்கென விண்வெளி ஆய்வு நிறுவனம் கிடையாது. தற்போது புதிய நிறுவனத்தை உருவாக்க வுள்ளதாக  ஆஸ்திரேலிய  அரசு தெரிவித்துள்ளது. 334 பில்லியன் டாலர்கள் விண்வெளி ஆய்வு சந்தையில்  ஆஸ்திரேலியா தனது கவனத்தை குவித்துள்ளதன் வெளிப்பாடே  இந்த அறிவிப்பு.

சிறிய செயற்கைக்கோள்கள் தயாரிப்பு, விண்வெளி ஆய்வு மென்பொருட்கள், தொலைத்தொடர்பு என 3.1 பில்லியன் டாலர்கள் ஆஸ்திரேலியாவில் புழங்குகிறது. இதன் மூலம் 11.500 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பதால் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கலாம் என்பது  ஆஸ்திரேலியாவின் கணக்கு. “எங்களுக்கான விண்வெளி பணிகளை  நாசாவுடன் ஒப்பந்தமிட்டு செய்துவந்தோம்.

அதே வேலைவாய்ப்புகளை உள்நாட்டில் உருவாக்குவது காலத்தின் அவசியம். விண்வெளிக்கு மலிவு விலையில் செயற்கைக்கோள்களை தரமான முறையில் அனுப்புவது  எங்கள் குறிக்கோள்” என்கிறார் தொழில்துறை அமைச்சர் மிட்செலியா கேஷ். மார்ச் 2018 அன்று இதற்கான வரைவுத்திட்டம் வெளியிடப்படவிருக்கிறது.