நிக்கோல் பெசெட்



தலைவன் ஒருவன் இவன் 3

மௌபரீஸ் ரோட்டிலுள்ள டெர்பி அல்லது லிவிஸ் கடையில் ஆசை ஆசையாய் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை வாங்குகிறீர்கள். அதை எவ்வளவு நாட்கள் பயன்படுத்துவீர்கள்? பெரும் பாலும் அதன் ஜிப், அல்லது பட்டன்கள் உடைந்துபோகும்வரைதான்.

பின் அவை உங்களுக்கு சுமைதான். வாரண்டி இருந்து,  அதே கடையில் கொடுத்தால், வேறு உடை கிடைக்கலாம். நிறுவனத்தைப் பொறுத்தவரை அந்த டேமேஜான உடையோடு, அந்த ஆண்டில் விற்காத எக்ஸ்பைரியான டிசைன்களைக் கொண்ட உடைகளும் குப்பைதான். அமெரிக்காவில் அப்படி சேதமான, வாரண்டி இல்லாத உடைகள் என ஆண்டுதோறும் குவியும் குப்பையென தள்ளப் படும்  ஆடைக்கழிவுகள் மட்டுமே 16.2 மில்லியன் டன்கள் (EPA,2014).

சூழல் காக்கும் ஐடியா!

நிக்கோல் பெசெட். 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Renewal Workshop என்ற 7500 ச.அடி. இடத்தில் அமைந்துள்ள தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலம் ஆடைக்குப்பை  பிரச்னையை நாசூக்காக தீர்க்கிறார். பல்வேறு முக்கிய பிராண்டு நிறுவனங்களில் அக்ரிமெண்ட் போட்டு, கழிவான, கைவிட்ட உடைகளை இவர்கள் விலையில்லாமல் வாங்கி அதனை சீரமைத்து இணையதளத்தின் வழியே மீண்டும் விற்பதுதான் நிக்கோலின் ஐடியா.

“இதே ஐடியாவுடன் சந்தையில் சிலர் செயல்பட்டாலும் நாங்கள் கழிவாகும் துணியால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறித்த அறிவுடன் செயல்படு 
வதுதான்  எங்கள்  ஸ்பெஷல்” என படபடவென பேசும்  நிக்கோலின்  நிறுவனத்தில் 8  பணியாளர்கள் வேலை செய்கின்றனர். ஐந்து நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு சேதமடைந்த  உடைகளைப் பெற்று அதனை மறுவிற்பனைக்கு ஏற்ப டிசைன் செய்கிறது நிக்கோலின் டீம்.

அனுபவம் புதுசு!

டெக்ஸ்டைல் துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலான அனு பவம் துணிகளை ப்ராண்ட் நிறுவனங்களிடம் பெறுவதற்கும், அதனை இணையத்தில் விற்
கவும் உதவியுள்ளது. “நிறுவனத்தை தொடங்க ஈஸியாக ஐடியா கிடைத்தாலும், ஒவ்வொன்றுக்கும் சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து நிறு
வனத்தை தொடங்கிய தருணம் சிரமங்கள் நிரம்பியது” என  புன்னகைக்கிறார் நிக்கோல்  பெசெட். 

கனடாவின்   ஒன்டாரியோ பகுதியிலுள்ள  யார்க்  யுனிவர்சிட்டியில் சூழல் வணிகத்தில் ஆய்வு செய்து முதுகலைப்பட்டம் வென்றிருக்கிறார். Patagonia.Inc என்ற டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவர்களின் வணிகம் குறித்த அறிவைப் பெற்று அதனை சூழலுடன் மிக்ஸ் செய்து பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளில் வேலை செய்தவர் பின்னாளில் செர்ந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். 

இணையவழியில் விற்பனை செய்வதற்கு முன்னுரிமை தந்தாலும் சில குறிப்பிட்ட கடைகளில் தன்னுடைய ரீசேல் வெரைட்டிகளை விற்பனைக்கும் வைத்திருக்கிறார் நிக்கோல். “ஜீரோ வேஸ்ட் லட்சியத்துடன் ஐடியா கிடைத்தாலும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கான தொடர்புகள், வியாபாரம், முதலீடு என பல வற்றுக்குமான  மெனக்கெடல்கள் அதிகம்.

சூழல் பாதுகாப்பதற்கான  பல்வேறு பிளான்களை தீர்க்கமாக திட்டமிடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. கனவை நிஜமாக்கும் முயற்சியில் ஒரு கட்டத்தில் எனது  தலைமுடிகள்  கூட சால்ட்  அண்ட் பெப்பர்  ஸ்டைலில் மாறின. பின்னே பிஸினஸ் கனவை  கண்முன்னே பார்ப்பது அவ்வளவு ஈஸியா என்ன? ’’ என உற்சாகம் குறையாமல் பேசுகிறார் நிக்கோல் பெசெட். 

பாகுபாட்டை வென்றார்!

தன் தொழிலில் பெண் என்ற பாகுபாடு பிரச்னையை முதலீட்டாளர்களின் சந்திப்பில் சமாளித்திருக்கிறார். தொழில்துறையினர் பெரும்பாலும்
ஆண்கள் என்பதால், நிக்கோலைத் தவிர்த்து விட்டு, நிறுவனத்தின் துணை நிறுவனரான இவரது ஆண் நண் பரிடம் மட்டுமே அனை
வரும் உரையாடியது இவரை சாதிக்கத் தூண்டியிருக்கிறது.  அதுவே  பின்னாளில் அவரை தொழிலில் ஆழமாக கற்கவும், முதலீட்டாளர்களின் முன்னால் தன்னை நிரூபிக்கவும் உதவியது.

“பெண்கள் அனைத்திலும் முன்னேறி  வருகிற காலம் இது. பெண் தொழில்முனைவோர் மீது  முன் எப்போதையும்  விட ஊடக வெளிச்சம் பாய்ச்சப்படுவது நல்ல அறிகுறி. எனவே நல்ல ஐடியா என்றால் ஆராய்ச்சி செய்து நல்ல பிஸினஸ் மாடலாக அதனை வளர்த்தெடுத்தால் மட்டுமே நம்பிக்கை பெறமுடியும். கிடைக்கும் அனைத்து ஐடியாக்களையுமே பிஸினஸாக  மாற்ற முடியாது என்பதோடு விட்டுக்கொடுக்காமல் பிஸினஸ்  செய்தால் வெற்றி உறுதி ’’ என தொழில்முனைவோர்களுக்கான டிப்ஸ்களை தந்து  அசத்துகிறார் நிக்கோல் பெசெட்.

“உலகளவில் 16.2%  உடைகள் ரீசைக்கிள் செய்யப்படுகின்றன. ரீசைக்கிள் செய்பவர்கள் அனைவரிடமும்  அதற்கான இடவசதி இருக்காது. எனவே, எங்கள் நிறுவனத்தை அச்செயல்களை  ஒருங்கிணைப்பதற்கான  இடமாக மாற்றினோம்”  என்கிறார். துணிகளை துவைப்பதற்கு நீருக்கு பதில் கார்பன்டை ஆக்சைடை  பயன்படுத்துவது நிக்கோலின்  இயற்கை நேய ஐடியா.

கழிவாகும் துணிகள்!

மறுசுழற்சி - 2.6 மில்லியன் உடைகள்
எரிக்கப்படும் துணிக்குப்பைகள் - 3.1 மில்லியன் டன்கள்
குப்பை - 10.5 டன்கள்

(2016 ஆண்டு தகவல்படி)