பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!கூகுள் நிறுவனத்தில் புதிதாய் சேர்பவர்களுக்கு ‘Noogles’ என்று பெயர். வேலைக்கு சேர்ந்த வாரத்தின் முதல் வெள்ளியன்று, புதியவர்கள் ஹெலிகாப்டரின் இறக்கை  வைத்த (புரொபெல்லர் பீனி)  தொப்பி  அணிந்து  வரவேண்டும் என்பது கூகுள் ரூல்.

மூங்கில், தாவரங்கள், சிறுபூச்சிகள் என வெரைட்டியாக சாப்பிடும் கொரில்லாவின் சராசரி வாழ்நாள் 50 ஆண்டுகள்.காட்டிலுள்ள புலிகளை விட வளர்ப்பு விலங்காக வளர்க்கப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகம்.

இன்று நாம் சப்புக்கொட்டி சாப்பிடும் கெட்ச் அப் முதன்முதலில் மருந்தாக எந்த நோய்க்கு பயன்பட்டது தெரியுமா? வயிற்றுப்போக்கு இருட்டில் வைத்தாலும் கோலா தெளிவாகத் தெரியவேண்டும் என்பதுதான் கொக்ககோலா பாட்டில் டிசைன் சீக்ரெட்.