புதுமையான மல்டி எலிவேட்டர்!அண்டர்கிரவுண்ட் ரயில்- கேட்க நன்றாக இருந்தாலும் அதில் பயணிக்க இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள்தான் ஆல்வேஸ் பரிதாபம். ரயில்வே  ஸ்டேஷன்  லிஃப்ட்கள் பெரும் பாலும்  வேலை  செய்யாது என்பது நம்  நாட்டுச் சிறப்பு. நியூயார்க்கில் 180 அடி தூரமாகவும், லண்டனில் 200 அடி  தூரமாகவும்  ரயில்வே  ஸ்டேஷன் அமைந்துள்ளது.

வெஸ்டன் வில்லியம்சன் என்ற ஆராய்ச்சியாளர், Thyssenkrupp என்ற  ஜெர்மனி நிறுவனத்திற்காக மல்டி என்ற எலிவேட்டர்  சிஸ்டத்தை  கண்டுபிடித்துள்ளார்.

இந்த எலிவேட்டர்  இடதுபுறம், வலது புறம் என நகர்ந்து மேல்நோக்கிச் செல்வது இதில் புதுசு. இந்த புதுமையான லிஃப்டை சோதிக்க, 800 அடி உயரத்தில் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இடது, வலது என  நகர்வதற்காக  காந்த  காயில்கள்  பயன்
படுத்தப்பட்டுள்ளன. ஒரு கேபினில் 10 நபர்கள் பயணிக்கலாம் என்பதோடு மக்கள் பெருக்கத்திற்கும் இது புதிய தீர்வு. 15-30 நொடிகளுக்கு ஒரு எலிவேட்டர் என வேகமாக வேலை செய்யும்.

கூட்டம் இல்லாதபோது சில எலிவேட்டர்களுக்கு  தற்காலிகமாக லீவு கூட கொடுத்துவிடலாம். நேராக எலிவேட்டரில்  ட்ரெயின் அருகே போய் இறங்குவதோடு, இந்த எலிவேட்டர் அமைக்க தேவையான இடமும் குறைவு. எதிர்காலத்தில் இந்த மல்டி எலிவேட்டர் அமைவதற்கான சான்ஸ் உண்டு.