குடும்ப விலங்குகள்



எலியைப் போன்ற சிறிய கண்களும் நீள மூக்கும் கொண்டுள்ள ‘ஐரோப்பிய ஷ்ரூ’ எனும் குட்டியூண்டு பூச்சியுண்ணும் பாலூட்டி விலங்கினம் தம் குடும்பத்தோடு வாழும். கூட்டமாக வெளியே பயணிக்கும்போது ஒன்று மற்றொன்றின் வாலைப் பிடித்துக்கொண்டே நடக்கும்.

அதிக விஷமுள்ள ‘டார்ட் ஃபிராக்’ தவளையின் தலைப்பிரட்டைகளுக்கு நீச்சல் தெரியாது. எனவே அவை நீரில் செல்லும்போது தம் பெற்றோரின் முதுகுக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு செல்லும்.

நைல் நதியில் வாழும் ஒருவகை முதலைகளின் குட்டிகள், தம் குடும்பத்தைச் சார்ந்த பிற முதலைகள் ஆபத்தில் இருந்தால் உடனே கீச்சிட்டு அலறி மற்ற உடன்பிறப்புகளை எச்சரிக்கும்.

ஓர் திராட்சைக் கொத்து போன்ற முட்டைப் பையிலிருந்து ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட பிளாக் விடோ சிலந்திக் குட்டிகள் பொரித்து வெளிவருகின்றன.

மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, தாய் யானைகள் தம் தும்பிக்கைகளைப் பயன்படுத்தி தமது குட்டிகளை அலேக்காகத் தூக்கி விடுகின்றன.

நெருப்புக்கோழி போல இருக்கும் அதே இனத்தைச் சேர்ந்த பறவை, கேஸோவரி. பெரிய பறக்கமுடியாத பறவைகளான இந்த இனத்தில் குஞ்சுகளை
தந்தைப் பறவையே வளர்க்கிறது.
 
ஆப்பிரிக்காவில் வசிக்கும் கீரி இனமான மீர்கேட் விலங்
கினம், கதகதப்புக்காக தம் குடும்பத்தோடு ஒன்றின் மேல் ஒன்று ஒட்டிப் படுத்து ஓய்வெடுக்கும்.

சிலவகை விஷத் தவளைகள் தம் கசக்கும் விஷத்தை இனிப்பாக்கி எதிரிகளுக்குக் கொடுக்க கொஞ்சம் சர்க்கரையையும்  உருவாக்கிச் சேர்க்கின்றன.

கணவாய் மீனின் கண்களில் இருக்கும் கருவிழியில் ‘W’ என்ற எழுத்தின் வடிவத்தைக்காணலாம்.
 
அமெரிக்காவில் காணப்படும் வழுக்கைத்தலை கழுகுகள், நீரில் தமது இறக்கைகளை துடுப்புகள் போல பயன்படுத்தி நீந்து
கின்றன.

- ஜேக் ப்ரூஸ்