நம்பினால் நம்புங்கள்



*அமெரிக்க கரன்சிகளில் இறந்து போனவர்களின் படங்கள் மட்டுமே இடம்பெறலாம் என்கிற சட்டம் உள்ளது.

*உலகில் உள்ள அத்தனை மக்களும் நாடுகளும் சொந்தமாக வைத்திருக்கும் மொத்த பண மதிப்பு 199 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். ஆனால், வங்கிகளிலும் கையிருப்பாகவும் உள்ள மொத்த பணம் 80.9 ட்ரில்லியன்தான்!

*33 ஆயிரத்து 333 அடி (10 ஆயிரத்து 160 மீட்டர்) உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து பாராசூட் இன்றி கீழே விழுந்த பணியாளர் வெஸ்னா உலோவிக் உயிர் பிழைத்தது ஓர் ஆச்சரிய சாதனை!

*கனடாவிலுள்ள ஒன்டாரியோவில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏரிகள் உள்ளன. பூமியில் உள்ள நன்னீரில் 5ல் ஒரு பங்கு அங்குதான் உள்ளது.

*விண்வெளியில் நடக்கிற விண்வெளியாளர்கள் கை விரல் நகங்களை அடிக்கடி இழக்கிறார்கள்.

*பாதாள சாக்கடை மூடிகள் வட்டமாக இருப்பதால்தான், அவை உள்ளே விழுவதில்லை.

*சோம்பேறிகளுக்கு கடினமான வேலைகளைக் கொடுத்தால், அவர்கள் எளிதான வழிமுறைகளைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பில் கேட்ஸ் ஒருமுறை கூறியிருக்கிறார்!

*புரிந்துகொள்ளும் வகையில் மனிதக் குரல் முதன்முதலாக பதிவு செய்யப்பட்டது 1860ம் ஆண்டில்தான்.

*4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் 19 சதவிகிதப் பரப்பளவுக்கு கடல் இருந்தது!

*2100ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழிவதற்கான வாய்ப்பு 19 சதவீதம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.