தகவல் துளிகள்



*ஆந்தைகளின் கூட்டத்தை ‘பார்லிமென்ட்’ (Parliament) என அழைப்பர்.

*ஆஸ்திரேலியாவில் ஒரு இசைக்குழுவினர் உயர் அதிர்வெண் கொண்ட இசைக்குறிப்புகளை வாசித்தனர். இந்த இசை நிகழ்ச்சியை மனிதர்களால் கேட்க முடியாது. நாய்களால் மட்டுமே கேட்க முடியும்.

*‘i’, ‘j’ போன்ற எழுத்துக்களின் மீது போடப்படும் புள்ளியை ‘tittle’ என ஆங்கிலத்தில் அழைப்பர்.

*புதன் கோளில் தினமும் இருமுறை சூரியன் உதயமாகி மறையும்.

*பெரு நாட்டின் லிமா நகரில் ஒரு பாலத்தை, பத்து லட்சம் முட்டைகளின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தி கட்டியுள்ளனர்.

*சில நாகப்பாம்புகள் கக்கும் விஷம் ஆறரை அடி நீளம் பாயும். இது ஹாக்கி மட்டையின் நீளத்தைவிட அதிகம்.

*வயிறு முழுமையாய் நிரம்பியிருக்கும்போது நாம் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.

- ராஜிராதா, பெங்களூரு.