டியர் டாக்டர்



`கல்லாதது உடலளவு’ ஒரு விழிப்புணர்வு தொடர். உறுப்(பு)படியான தானம் பற்றி விளக்கியதுமெய்சிலிர்க்க வைத்தது. இன்னும் பல ஆச்சரியங்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.  அட்டையிலும் சரி உள்ளேயும் சரி... இளமை மட்டுமல்ல... புதுமை! நாங்களும் படித்து தெரிந்துகொள்ள வேண்டியதும் கடமை... நன்றி பல!
- மஞ்சுளாபாய், சென்னை-39.

‘உ(எ)ங்கள் உரிமை’ என்ன என்பதை அமீர்கான் விளக்கியிருக்கும் விதம் அருமை... இது அனைவருக்கும் பயன்படும் அருமையான கட்டுரை.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

தலை சுற்றலுக்குள் இத்தனை காரணங்களா? தலையே சுத்துது போங்க!- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி மற்றும்
இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மார்பக  புற்றுநோய்-எய்ட்ஸ் நோய்களால் இறப்பவர்களைவிட நீரிழிவு சார்ந்த கோளாறுகளினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்ற
தகவலால்  எங்களுக்குள் பெரிய ‘கிலி’யையே உண்டாக்கி விட்டீர்களே!

என்  மனைவிக்கு சில வாரத்துக்கு முன் உதட்டோரம் கொப்புளங்கள் வந்தது. உடனே  அவள் பல்லி எச்சமிட்டது என்றாள். நான் இவ்வாரம் வெளிவந்த ‘குங்குமம் டாக்டர்’  இதழில் டாக்டர் ரவிச்சந்திரனின் கட்டுரையைப் படிக்கச் சொன்னேன். தெளிவு பிறந்தது!
- எஸ்.துரைசிங் செல்லப்பா,உருமாண்டம்பாளையம், கோவை-29.

சோரியாசிஸ் பற்றிய டாக்டர் தலத் சலீமின் தகவல்கள், பல உண்மைகளை உணர்த்தியது. அது தொற்றுநோய் அல்ல என்கிற தகவல் நிம்மதி தந்தது.
- பாகீரதி, பீளமேடு.

`உத்தம வில்லன்’ பார்த்த கையோடு, அதன் நாயகனுக்கு வந்த மூளைக்கட்டி பற்றிய விழிப்புணர்வையும் விளக்கமாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள்.... செம டைமிங் சென்ஸ் உங்களுக்கு!
- டி.கார்த்திக், சென்னை-11.

மது என்கிற போதை, வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினரின் மூளையை எப்படியெல்லாம் மழுங்கடிக்கச் செய்யும் என்கிற மாபெரும் ஆபத்தை உணர்த்துகிறது ‘மது... மயக்கம் என்ன’ தொடர். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய தகவல்!
- தங்கதுரை, செங்கல்பட்டு.