அதென்ன கணுக்கால்நீர்க்கட்டி



தெரியுமா?

கோடைக்காலங்களில்தான் கட்டி வந்து நம்மை படாதபாடு படுத்தும். ஆனால், மழைக்காலம், பனிக்காலம் என எந்தக் காலத்திலும் கை மற்றும் கால்களில் தோன்றி, அன்றாட வேலைகளைச் செய்யவிட முடியாமல் தடுப்பது கணுக்கால் நீர்க்கட்டி (Ganglion Cyst). இந்த வகை கட்டி வருவதற்கான காரணம்,  அறிகுறிகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்துப் பேசுகிறார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் மோகன் ராவ்.

நமது கை மற்றும் கால்களில் உள்ள தசை நார்களுக்கு (Tendon) மேலே உள்ள Tendon Sheathல் ஒரு வகை திரவம் உள்ளது. இந்த திரவம்தான் நம்முடைய கை, கால்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பாக செயல்பட உதவுகிறது.

 Tendon Sheathல் காணப்படும் திரவம் அதிகமானால், நம்முடைய கை, கால்களில் கட்டி வரும். இந்தக் கட்டிகள் முதியவர், நடுத்தர வயதினர், குழந்தைகள், ஆண், பெண் என யாருக்கும் வரும். வலியில்லாத வீக்கம், வீக்கம் பெரிதாகப் பெரிதாக இணைப்புகளில் உண்டாகும் வலி ஆகியவைகணுக்கால் நீர்க்கட்டிக்கான அறிகுறிகள்.

கணுக்கால் நீர்க்கட்டியால் அவதிப்படுபவர்களில் பலர், உடல் அழகில்உண்டாகும் பாதிப்பு மற்றும் பயம் காரணமாகவே மருத்துவர்களிடம் வருகின்றனர். இந்தக் கட்டிகளை வரும் முன் தடுக்க முடியாது. ஆரம்ப நிலையில் கட்டி மிகவும் சிறியதாக காணப்படும்.

அந்த நிலையில் சிகிச்சை எதுவும் செய்ய முடியாது. அதனால் நோயாளிகளை 6 மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை கண்காணித்து வருவோம். அதன் பின்னர் கட்டி பெரிதானால், வலி அதிகமாக இருந்தால், கட்டி உள்ள இடத்தில் மட்டும் மரத்துப்போக செய்து, அறுவைசிகிச்சை செய்து அதை அகற்றுவோம்.

நீர்க்கட்டி என்பதால், தண்ணீருக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக நினைக்க வேண்டாம். உணவு முறை, மது மற்றும் பாக்கு பயன்படுத்தும் பழக்கம், செய்யும் வேலை ஆகியவற்றுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மரபணு காரணமாகவும் இந்தக் கட்டி உண்டாவது இல்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாது.

அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. சிகிச்சைக்குப் பின், வழக்கமாக செய்யும் எல்லா வேலைகளையும் பயம் இல்லாமல் செய்யலாம். கணுக்கால் நீர்க்கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒரு வாரத்துக்கு மட்டும் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். கை மற்றும் கால்களில் சின்ன கட்டி வந்தாலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

உடனே மருத்துவரை அணுகி, அது என்ன வகையான கட்டி என்பதை பரிசோதனை செய்து, அதற்கானசிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும்...’’வலியில்லாத வீக்கம், வீக்கம் பெரிதாக பெரிதாக இணைப்புகளில் உண்டாகும் வலி ஆகியவை கணுக்கால் நீர்க்கட்டிக்கான அறிகுறிகள்.

கேப்ஸ்யூல்

திடீர்!
மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக் கொள்கிற மருந்துகளை திடீரென நிறுத்தக் கூடாது என்பது உண்மையா?
- மனநல மருத்துவர் ஷாலினி

மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக் கொள்கிற மருந்துகளை ஒருவர் திடீரென  நிறுத்தக்கூடாது என்பது முற்றிலும் உண்மை. இந்த மாத்திரைகளை சாப்பிடு
வதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிறுத்த வேண்டும். திடீரென மாத்திரைகளை   நிறுத்தினால், எந்தப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கினோமோ, அதனுடைய முதல் நிலைக்கே மீண்டும் சென்று  விடுவோம்.

வலிப்பும் வரலாம். ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள்,  ஆன்டிபயாடிக் மாத்திரைகள், மனநலப் பிரச்னைகளுக்கான மாத்திரைகள் என எந்த வகை  மாத்திரைகளாக இருந்தாலும், என்னென்ன அளவில் அவற்றைச் சாப்பிட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர்கள்தான் முடிவு செய்ய  வேண்டும்.  
 
- பாலு விஜயன்  

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்