மது மயக்கம் என்ன?



புதிய பகுதி

இணையம்

ஷாப்பிங்

உணவு

கஃபைன்

புகையிலை

போதைப் பொருள்

செக்ஸ்

சூதாட்டம்


உலக மக்களில் பெரும்பகுதியினர், இந்த8 விஷயங்களில் ஏதேனும்ஒன்றுக்குப் பழகிப் போய் அடிமையாக மாறியிருக்கிறார்கள். ஆனால், இந்த எட்டையும் தாண்டி, இனி எந்தவொரு போதையும் போட்டிக்கு வந்துவிடாதபடி, எட்டாத உயரத்தில் இருக்கிறது இன்னொரு போதை.அதுதான் குடி!இந்தியாவில்  குறிப்பாக, நம் தங்கத் தமிழகத்தில் மற்ற எல்லாவிதமான போதைகளையும் விட, ‘குடி’ எனும் பழக்கப் போதை குமரி முதல் மெரினா வரை கடல் போல விரிந்து பரவிக் கிடக்கிறது.

 இதன் உண்மைத் தன்மையை அறிய அதிகம் மெனக்கிட வேண்டியதில்லை... மதுவும் மது சார்ந்த இடமுமாகவே மாறி, புதிய திணையையே உருவாக்கிய பெருமை கொண்ட, தமிழ்மண்ணின் எந்த ஒரு சாலையிலும் குடிமகன்களின் தாய்மண் மீதான பற்றைக் காண முடியும்.

பல காலமாக (ஓரளவே) பழக்கத்தில் இருந்தாலும், புத்தாயிரம் ஆண்டு பிறந்த அந்த நாள் தொடங்கியே, இது அசுர வேகத்தில் வளர்ந்து, பள்ளி செல்லும் இளந்தளிர் முதல், பாடங்கள் பல கற்ற முதியவர் வரை, பல தரப்பினரையும் தன் இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளது. மது என்ற போதையின் பின்னணி என்ன? இதன் அறிவியல் என்ன? மருத்துவ அறிவியல் சொல்வதென்ன? சமூக அறிவியலில் இது ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன? இப்படி அ முதல் ஃ வரை இங்கே அலசுவோம்... வாருங்கள்!

கிறிஸ்து பிறப்பதற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நைல் நாகரிகத்திலேயே, அந்நதிக்கரையில் உருவாகியிருக்கிறதுஇப்புவியின் முதல் ஒயின் தொழிற்சாலை!நீண்ட நெடுங்காலம் முன்பே ‘மது’

என்கிற மர்மப் போதை திரவம் தோன்றிவிட்டாலும், கி.பி. 1830களில்தான்இங்கிலாந்து போன்ற நாடுகளில், கவனம் கொள்ளப்படும் வகையில் போதையாகபரவியது. இக்காலகட்டத்தில் குடிப்பவர்கள் அதிகரிக்கக் காரணம்  தொழில்மயமாதல்!இதன் பிறகுதான், அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் மது அருந்தும் பழக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில்,அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், தேசிய மதுவிலக்குச் சட்டத்தையே (1919) அமல்படுத்த நேர்ந்தது.

அப்போது, மதுபானத் தொழில் கிரிமினல் குழுக்களின் கைகளிலேயே இருந்தது. தொழில் பகை காரணமாக, அவர்களுக்கு இடையே ஏராளமான மோதல்களும் கொலைகளும் கூட டைபெறுவதுண்டு. இச்சட்டம் அமலுக்கு வந்த அடுத்த நொடியே, சட்டத்தை மீறும் செயல்கள் அரங்கேறின. சிகாகோவில், ஆயுதம் தாங்கிய 6 பேர், ரயில் பெட்டிகளில் அனுப்பப்பட்ட, 1 லட்சம் டாலர் மதிப்புள்ள ‘மெடிசனல் விஸ்கி’யை கொள்ளையடித்தனர். ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பதுக்கல்களும் தொடங்கியிருந்தன. இதன் பிறகு, 60 சதவிகிதத்துக்கும் அதிக போலீஸார், மதுவிலக்குப் பணியில் ஈடுபட வேண்டியிருந்தது. 1933ல் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு,

மீண்டும் ‘பார்ட்டி’ ஆரம்பமானது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘ஃபெடரல் ஆல்கஹால் அட்மினிஸ்ட்ரேஷன்’ அமைப்பு உருவாக்கப்பட்டு, மது சார்ந்த விஷயங்கள்அனைத்தும் முறைப்படுத்தப்பட்டன.

2003 முதல், ‘ஆல்கஹால் அண்ட் டோபாகோ டேக்ஸ் அண்ட் ட்ரேட் பீரோ’ மது மற்றும் புகையிலை தொழில்களை கையாளுகிறது.ஒரு கட்டத்தில் மதுவிலக்கை அமல் படுத்தி, 13 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்த அமெரிக்காவில் கூட, ஒருபோதும் தமிழ்நாடு அளவுக்கு போதை தலைவிரித்து ஆடியது கிடையாது. அங்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் குறைவுதான். இது அமெரிக்க மக்கள்தொகையில் 7.7 சதவிகிதம் மட்டுமே.

அந்தத் தேசத்தில், தினம் 12 ஆயிரம் பேர் புதிதாக மதுவை ருசி பார்த்தாலும், அதை விடாது தொடர்பவர்கள் குறைவே. ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ அமைப்பில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தாலும், தீவிரசிகிச்சையோ, ஆலோசனையோ தேவைப்படுகிறவர்கள் மிகமிகக் குறைவே.நம் நாட்டிலோ, இது எதிர்மறையாக இருக்கிறது. ‘உலக ராணுவம் முழுக்கவே சேர்ந்தாலும் மதுவைப் போல அதிகமானவரை கொல்ல முடியாது’ என்ற பொன்மொழிக்கு, வருந்தத்தக்க உதாரணமாகிக் கொண்டிருக்கிறது இந்த பூமி.

இந்தியாவில், 1960களில் ‘லைட்’ ஆக இருந்த மதுப்பழக்கம், 30 ஆண்டுகள் வரை மிதமான வளர்ச்சி வேகத்திலேயே இருந்திருக்கிறது. அதன் பிறகு, சிறிது வேகம் பிடித்து, 2000ம் ஆண்டுக்குப் பிறகே ‘ஹெவி’ ஆக மாறியிருக்கிறது. இந்திய சராசரியோடு ஒப்பிடுகையில், இந்த விஷயத்தில் தமிழ்நாடு ‘சாம்பியன்’ ஆகவே திகழ்கிறது.

 எங்கே போகும் இந்தப் பாதை?மதுவும் மது சார்ந்த இடமுமாகவே மாறி, புதிய திணையையேஉருவாக்கிய பெருமை கொண்ட, தமிழ் மண்ணின் எந்த ஒரு சாலையிலும் குடிமகன்களின் தாய்மண் மீதான பற்றைக்
காண முடியும்!

அதிர்ச்சி டேட்டா


*இந்தியாவில் மது குடிப்பவர்களில்...
பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா,
ஜின் போன்ற மதுவகைகளை
குடிப்போர்: 93.1%
பியர் மட்டும் குடிப்போர்: 6.8%
ஒயின் மட்டும் குடிப்போர் 0.1%
*இவர்கள் குடிப்பதை ‘ப்யூர் ஆல்கஹால்’ ஆகக் கணக்கிட்டால், ஆண்டுக்கு தலா 28.7 லிட்டர். இதுவே ஆண்கள் கணக்கில் 32.1 லிட்டர். பெண்கள் எனில் 10.6 லிட்டர். தினசரி கணக்காக தலா 62.7 கிராம்!

*இந்த அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்