கிரேட் சல்யூட்வாசகர் கடிதம்

+2 தேர்வுகள் முடியப்போகிறது. அடுத்ததாக என்ன  படிக்கலாம் என்ற  மாணவர்களின் மனநிலையை உணர்ந்து எஞ்சினியரிங் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகள் குறித்த விரிவான  கட்டுரைகளை அளித்திருப்பது சிறப்புகுரியது . மாணவர்களின் நலன் சார்ந்து செயல்படும் குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டிக்கு ஒரு கிரேட் சல்யூட்.
- கி.ராஜாமணி, வேலூர்.

படிப்புகளின் வகைகள், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை கணித கல்வி நிறுவனத்தின் வழங்கப்படும் படிப்புகள் குறித்து விரிவாக  அலசும்  கட்டுரை அற்புதம். மேலும் இந்திராகாந்தி வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் குறித்த கட்டுரையும் முழுமையாகவும் விண்ணப்பித்தலுக்கு ஏதுவாகவும் இருந்தது.
- சி.வேணி, தேனி.

சாதிக்க வயது தடையில்லை முயற்சியும் பயிற்சியும் இருந்தால் போதும் என்பதை பூபேஷ் மற்றும் சம்யுக்தா நிரூபித்திருக்கிறார்கள். கண்கள் திறந்திருக்கும் நிலையில் செய்யும்போதே கஷ்டமாக இருக்கும் விளையாட்டுகளை இருவரும் கண்களை மூடிக்கொண்டு செய்து உலக சாதனை படைத்தது ஆச்சரியமளிக்கிறது. வாழ்த்துகள்.  
- அ.சகாயமேரி, விருத்தாசலம்.

சர்வதேச போட்டிகளில் தங்கம் குவித்துவரும் தமிழக பெண் காவலர் பிரமிளா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். சர்வதே அளவில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டிய பிரமிளாவின் கனவு நிறைவேற வாழ்த்துகள்.
-ஆர்.ருத்ரன், காசிமேடு.