வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை.
வேலை: கிராஜுவேட் எஞ்சினியர் பணியில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், கெமிக்கல், மெடாலர்ஜி, சிவில் & மைனிங் ஆகிய பணி பிரிவுகளில் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 120
கல்வித் தகுதி : 65% மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்கவேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 55% பெற்றிருந்தால் போதுமானது.கடைசி வருடம் படித்து கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு:  20.3.2020 அன்றின்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தேர்வுமுறை: GATE மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.4.2020.
மேலதிக தகவல்களுக்கு : https://nalcoindia.com/

மத்திய உணவு மற்றும் தரநிர்ணய ஆணையத்தில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் உணவு மற்றும் தரநிர்ணய ஆணையம்
வேலை: ஆலோசகர், இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், நிர்வாக அலுவலர், உதவி, மூத்த தனி செயலாளர், தனி செயலாளர், மூத்த மேலாளர், மேலாளர் மற்றும் துணை மேலாளர் முதலிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
காலியிடங்கள்: மொத்தம் 83
கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கப்போகும் துறை களுக்கு ஏற்ப பட்டம், முதுகலை பட்டம், முதுகலை டிப்ளோமா, பி.இ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படித்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை: Deputation Basis மற்றும் Short term Contract Basis அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.4.2020
விரிவான தகவல்களுக்கு : https://fssai.gov.in/

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் வேலை

நிறுவனம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இயங்கும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம்.
வேலை : Designer Gr-IV (SR4) (Mechanical), Jr. Supervisor Gr-III (SR4) (Mechanical), Designer Gr-IV (SR4) (Electrical),  Jr. Supervisor Gr-III (SR4) (Electrical), Jr. Supervisor Gr-III (SR4) (Civil), Office Assistant Gr-V (SR3) (Secretarial), Junior Fire Inspector Gr-IV (SR3), Driver Gr-v (SR2) (C&MD’s Secretarial) என எட்டுவிதமான பிரிவுகளில் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 51
கல்வித் தகுதி: மாறுபட்ட பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதால் பணிகளுக்கு ஏற்றார்போல் கல்வித் தகுதி மாறுபடுகிறது.
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு மாறுபடுகிறது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.  Junior Fire Inspector மற்றும் Driver பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.4.2020
மேலதிக தகவல்களுக்கு:https://www.hslvizag.in/

இந்திய ராணுவத்தில் வேலை

நிறுவனம் : இந்திய ராணுவம்
வேலை: Soldier (Technical), Soldier (Technical) (Ammunition / Aviation), Soldier (Nursing Assistant), Soldier (General Duty), Soldier (Tradesman) , Soldier ( Clerk / Store Keeper Technical) போன்ற ஆறு பிரிவுகளில் வேலை.
கல்வித் தகுதி:  மொத்தம் ஆறு பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதால் கல்வித் தகுதி, உடற்தகுதி, உடற்திறன் தகுதி ஆகியன பணிகளுக்கு ஏற்றார்போல் மாறுபடுகிறது.
வயது வரம்பு :Soldier (General Duty) பணிக்கு 17 முதல் 21 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.  மற்ற அனைத்து பணிகளுக்கு 17 முதல் 23 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆட்சேர்ப்பு மையம்: கோவை பாரதியார் யுனிவர்சிட்டி விளையாட்டு அரங்கம்.
தேர்வுமுறை: கல்வித் தகுதி, உடற்தகுதி, உடற்திறன் தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசிநாள் : 19.4.2020.
விரிவான தகவல்களுக்கு : https://joinindianarmy.nic.in/