மத்திய அரசின் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!
அட்மிஷன்
உலகெங்கிலும் தொழில்துறையில் குறிப்பாக பொறியியல் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியால் கருவி, அச்சு போன்ற பொறியியல் சார்ந்த இதர துறைகளில் சர்வதேச தரத்திலான பயிற்சி தேவைப்பட்டது. அதன் காரணமாக இந்திய அரசாங்கம் டென்மார்க் அரசோடு இணைந்து 1991ம் ஆண்டு Central Tool Room and Training Centre (CTTC) ஐ உருவாக்கியது.
 மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது இப்பயிற்சி நிறுவனம். கருவி, அச்சு சார்ந்த பல்வேறு குறுகிய கால, நீண்ட கால பயிற்சி வகுப்புகள் மற்றும் டிப்ளோமா படிப்புகளை இப்பயிற்சி வழங்கிவருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இயங்கிவரும் இந்நிறுவனந்த்தில் 2020-21ம் ஆண்டுக்கான டிப்ளோமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
நான்கு வருட கால அளவிலான Diploma in Tool & Die Making மற்றும் மூன்று வருட கால அளவிலான Diploma in Mechatronics ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.
கல்வித்தகுதி
விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகரம் பெற்ற கல்விநிறுவனங்களில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை முதன்மை பாடமாக தேர்வு செய்து 50% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 40% மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.
வயது வரம்பு
01 ஜூலை 2020 அன்றின்படி விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 19 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 22.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.cttc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.550ஐ வரைவோலையாக செலுத்தி ’ The Managing Director, Central Tool Room and Training Centre, Plot no: B-36, Chandaka Industrial Area, Bhubaneshwar 751024‘ என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அல்லது விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் ரூ.250 ஐ செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 18.4.2020. முழு விவரங்களை அறிய https://www.cttc.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.
- ஜி. மணிகண்டன்
|