மத்திய அரசின் MOFPI வழங்கும் ரூ.5 கோடி கடன் திட்டம்!கடன் திட்டம்

கிஸான் சம்பாடா யோஜனா  (Kisan Sambada Yojana)


மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் (MOFPI) உணவுப் குளுரூட்டி பாதுகாப்பு சார்ந்த தொழில்களுக்கு ரூ.5.00 கோடி வரை மானியத்துடன் கடன் பெரும் திட்டம். "(Scheme for Creation of Backward and Forward Linkage)" அழுகும் உணவுப் பொருட்களைத் தரம் பிரித்து குளிரூட்டி பாதுகாத்து விற்பனை வரை கொண்டுசெல்லும் கோல்ட் செயின்  தொழில்களுக்கு கடன் பெரும் திட்டம்.

இந்தியா உலகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்வதில் உலகில் முதலாம்  இடத்திலும்  காய்கனி வகைகள் உற்பத்தி செய்வதில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த வகை எளிதில் கெட்டுப் போகும் காய்கனி வகைகளை பால் பொருட்கள் மாமிசம், கோழி, மீன் மற்றும் மீன்வகை, பன்றி மாமிசம் கொண்டு உற்பத்தி செய்யும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் இவற்றை கெடாமல் கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலையங்களுக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய வண்டிகள், எளிதில் அழுகும் நிலையில் உள்ள உணவுவகைகள்  பின் மற்றும் முன் இணைக்கும் செயல்பாடுலுக்கு மானியய்துடன்  கடன் மற்றும் வசதிகளை உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் (MOFPI) அன்மையில் அறிவித்துள்ளது.

கெட்டுப் போகும் நிலையில் உள்ள உணவுப் பொருட்களை கெடாமல் பல நாட்கள் பாதுகாப்பாக வைக்கவும், குளிர்சாதன பெட்டகம், குளிர் சேமிப்பு கிடங்கு, குளிர் சாதனம் பொருந்திய வண்டிகள் காய்கனிகளை எளிதில் கையாளுதல், காய்கனிகளை பழுக்க வைக்கும் கிடங்கு , காய்கனிகளை சேமிக்க உதவும் உபகரணங்கள், புதிய பொலிவுடன் கூடிய விற்பனை நிலையங்கள் இவை அனைத்தும் குளிர் சாதனம் பொருந்திய வண்டிகளுடன் இணைத்து உழவர்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களை கெடாமல் பாதுகாத்து நல்ல விலை கிடைக்க செய்யும் அணைத்து நிறுவனங்களுக்கும் கடன் வசதி மற்றும் அந்த உபகரணங்களுக்கு மானிய வசதியும் கிடைக்கும்.

இந்த திட்டம் யாருக்கு தொடர்புடையவை...

*காய்கனி வகைகள்
*பால் மற்றும் பால் பொருட்கள்
*மாமிசம், கோழி, மீன் மற்றும் மீன்வகை, பன்றி மாமிசம்
*உடனடியாக சாப்பிடும் உணவு மற்றும் உடனடி சமைத்து சாப்பிடும் உணவு வகைகள்
*அழுகும் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை கடைகள்

எந்த தொழில்கள்...முன் இணைப்பு ரீடையில் செயின்

*பேக்கிங் நிலையம், தானியங்கி பிரித்தல், அளவு சரிபார்த்தல், மெழுகு பூசுதல், குளிர் அறைகளில் பாதுகாத்தல்.

*பால் குளிரூட்டும் நிலையங்கள்

*குளிரூட்டும் நிலையங்கள், குளிரூட்டிகள்

*ரீப்பர் படகுகள்

*எந்திரங்கள் சிறிய அளவிலான சேவைகள், வெட்டுதல், சீவுதல், ஊற வைத்தல், காய வைத்தல், கூழ் தயாரித்தல், டப்பாகளில் அடைத்தல், மெழுகு பூசுதல்

*எந்திரங்களில் பேக்கிங் செய்தல் கடினமானவை

பின் இணைப்பு ரீடையில் செயின் அழுகும் உணவுப் பொருட்களை பாதுகாக்க உற்பத்தி செய்யும் இடத்தில் விற்பனை நிலையம் அமைத்தல், குளிருட்டிய அறைகள், குளிருட்டிகள் மிக குளிருட்டிகள்  உறைபனி ஏற்படுத்தி பாதுகாத்தல் போன்றவை ஏற்படுத்தும் தொழில்களுக்கு.

வாகனங்கள்

குளிரூட்டிய வண்டிகள்  வாகனங்கள் படகுகள்  இவை மேலே கூறிய இரண்டுக்கும் இணைக்கும் வண்டிகளாக அமைத்தல்.
இந்த நிலையங்கள் செயல்பாடுகள் அழுகும் தன்மையுடைய உணவு பொருட்களை குளிரூட்டி பாதுகாப்பதுடன் அவை கெடாமல் உணவுப்பதப்படுதும் தொழில் சாலைகள் மற்றும் உபயோகத்தில் பயனர்களை அடையும் வரை பாதுகாத்து கொண்டுச்செல்லும்  கோல்ட் செயின் அமைத்தல் ஆகும்.  இதனால் உணவுப் பொருட்கள் கெடாமல் உழவர்களுக்கும் மற்றும் விற்பனையாளர்களுக்கும் நல்ல விலை மற்றும் லாபம் கிடைக்கும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் அடைவார்கள்..?

உணவு பதப்படுத்தும் தொழில் கூடங்கள் புதிய தனி நபர் தொழில்முனைவோர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபம். குழுக்கள்,  உழவர் சங்கங்கள் , உழவர்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் முலலியன ஆகும். இந்த தொழிலில்  உணவு பதபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்து செல்வதற்கு முன் எளிய முறையில் பதபடுத்தும் முறைக்கு உண்டான தொழில் வாய்ப்புகளை பயன்படுத்துபவர்களாக இருத்தல் வேண்டும். தனிநபர், கம்பெனி, பங்குதாரர் கம்பெனிகளும் பயன்பெறலாம்.

இதற்கான திட்ட மதிப்பு எந்திரங்கள் மற்றும் எந்திரங்களுக்கான தொழில்நுட்ப கட்டிடங்களுக்கு நிதி வழங்கப்படும்.

மானிய உதவி

அதிகபட்சமாக இந்த தொழில் துவங்குபவர்களுக்கு 35% மானியமாக வழங்கப்படும். கிழக்கு இந்திய பகுதிகளுக்கு 50% வழங்கப்படும். அதிகபட்ச மானியமாக ரூ.5.00 கோடி வரை வரை வழங்கப்படும். மீதி நிதி உதவி வங்கிகளில் கடனாக பெறலாம்.
இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்கள் மற்றும் இந்த திட்டத்தில் உங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கீழ்க்கண்ட இணைய தளத்தை அணுகலாம்.

www.mofpinic.in இந்த இணையதளத்தில் ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்திற்கு திட்ட அறிக்கை மற்றும் வங்கிகளின் பரிந்துரை பயனாளிகளின் பங்கு 20% வரை இருக்க வேண்டும்.
உங்களுடைய விண்ணப்பங்கள் உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் டெக்னிகல் கமிட்டி ஆய்வு செய்து பிறகு அமைச்சகத்தில் அப்ருவல் கமிட்டி முடிவு செய்து மானியத்தை வழங்கும்.

இந்த திட்டத்தில் விண்ணபிக்க உங்களுக்கு திட்ட அறிக்கை தேவை. திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.மேலும் இத்திட்டம் பற்றிய விவரங்களுக்கும் மற்றும் தொழில் திட்ட அறிக்கைகளுக்கும் 044  2225208 / 82 / 83 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.