தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர் பணி! 2900 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

தமிழ்நாட்டில் 1957-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-இன் கீழ் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்கி வந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 2900 கள உதவியாளர்(பழகுநர்) (Field Assistant -Trainee) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதறகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், ஓயர்மேன் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழியான தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2029 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35-க்குள்ளும், எம்.பி.சி, டி.சி, பி.சி.ஓ, பி.சி.எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33-க்குள் இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓ.சி, பி.சி.ஓ, பி.சி.எம், எம்.பி.சி மற்றும் டி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.4.2020

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.4.2020
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான ஆட்கள் நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

-முத்து