வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

ஐ.டி.ஐ படிப்புக்கு இஸ்ரோவில் வேலை!

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிறுவனத்தின் ஹரிகோட்டா கிளை
வேலை: 1. டெக்னீஷியன் பி 2. டிராஃப்ட்மேன் பி 3. ஃபையர்மேன் ஏ
காலியிடங்கள்: மொத்தம் 53. இதில் முதல் பிரிவில் 40, இரண்டாம் பிரிவில் 2, மற்றும் மூன்றாம் பிரிவில் 11 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட துறைகளில் ஐ.டி.ஐ படிப்பு
மற்றும் என்.டி.சி, என்.ஏ.டி. சான்றிதழ் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: முதல் இரண்டு பிரிவுகளுக்கு 18-35; மூன்றாம் பிரிவுக்கு 18-25
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.isro.gov.in

எரிசக்தி ஆய்வுத் துறையில் ஸ்டெனோ வேலை!

நிறுவனம்: சி.ஐ.எம்.எஃப்.ஆர் எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மைனிங் அண்ட் ஃப்யூல் ரிசர்ச் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் ஜார்கண்ட் கிளை.
வேலை: அசிஸ்டென்ட்(கிரேட் 111), மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: மொத்தம் 45. இதில் முதல் பிரிவில் 29, இரண்டாம் பிரிவில் 16 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு +2ல்
வணிகப் பாடம் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது பிரிவில் பத்தாவது தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18-28
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.cmrfr.nic.in

தேசிய உரத்தொழில் நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான நேஷனல் ஃபெர்டிலைஸர்ஸ் லிமிடெட் எனும் தேசிய உரத்தொழில் நிறுவனம்
வேலை: ஆபீஸ் அசிஸ்டென்ட், அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் மார்க்கெட்டிங் என்ற 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 78. இதில் முதல் பிரிவில் 20, இரண்டாம் பிரிவில் 28, மூன்றாம் பிரிவில் 30 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: முதல் பிரிவுக்கு ஏதாவது டிகிரி, இரண்டாம் பிரிவுக்கு பி.காம் டிகிரி மற்றும் மூன்றாம் பிரிவுக்கு பி.எஸ்சி டிகிரி படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 30க்குள்
விண்ணப்பிக்க  கடைசித் தேதி: 19.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.natinalfertilizers.com

கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

நிறுவனம்: என்.ஐ.ஆர்.டி எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் டெவலப்மென்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ்
வேலை: மாடரேட்டர் மற்றும் கம்ப்யூட்டர் அசிஸ்டென்ட் எனும் 2 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 62. இதில் முதல் பிரிவில் 30, இரண்டாம் பிரிவில் 32 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு சோஷியல் சயின்ஸ் படிப்புகள் ஏதாவதில் முதுகலைப் படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் அறிவும், இரண்டாம் வேலைக்கு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பில் முதுகலைப் படிப்புடன் அனுபவமும் அவசியம்.
வயது வரம்பு: 40 வயதுக்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க  கடைசித் தேதி: 18.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.nird.org.in

அரசு காகித நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: ஹிந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிட்டெட் எனும் மத்திய அரசின் காகித நிறுவனம்.
வேலை: எலக்ட்ரிஷியன், பாய்லர்
அட்டன்டண்ட், ஃபிட்டர் உட்பட 18 துறை
களில் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 80. இதில் முதல் வேலையில் 14, இரண்டாம் வேலையில் 15 மற்றும் மூன்றாம் வேலையில் 18 இடங்கள் உள்ளன. மற்றவை சொற்பமே.
கல்வித் தகுதி: துறைகளுக்கு ஏற்ப ஐ.டி.ஐ படிப்பு அவசியம்.
வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்க  கடைசித் தேதி: 20.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.hnlonline.com

பண அச்சகத்தில் 120 பணியிடங்கள்!

நிறுவனம்: ரிசர்வ் வங்கியின் துணை அமைப்புகளில் ஒன்றாக பெங்களூருவில் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் எனும் பணம் அச்சகம்
வேலை: இண்டஸ்ட்ரியல் ஒர்க்மேன்
காலியிடங்கள்: மொத்தம் 120. இதில் பொதுப்பிரிவினர் 61, ஓ.பி.சி 32, எஸ்.சி 18, எஸ்.டி 9.
கல்வித் தகுதி: பிரின்டிங் படிப்பில் டிப்ளமோ. இதில் 55 சதவீத தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: 28க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க  கடைசித் தேதி: 18.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்
களுக்கு: www.brbnmpl.co.in

பீகாரில் பேராசிரியர் வேலை!

நிறுவனம்: தெற்கு பீகாரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டி
வேலை: 9 அடிப்படைப் பிரிவுகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பேராசிரியர், துணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்.
காலியிடங்கள்: மொத்தம் 73
கல்வித் தகுதி: குறிப்பிட்ட துறைகளில் பி.எச்டி. தேர்ச்சி
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.7.16
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.cub.ac.in

தொகுப்பு : டி.ரஞ்சித்