8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வைணவ வேத ஆகம சான்றிதழ் பயிற்சி



அறிவிப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் நடத்தும் வைணவ வேத ஆகம பாடசாலையில் மூன்றாண்டு கால வைணவ வேத ஆகம சான்றிதழ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 13 வயதுக்குக் குறையாமலும் 20 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். மேலும், நல்ல குரல் வளமும், உடல் வளமும் பெற்றிருத்தல் வேண்டும்.

http://sriparthasarathytemple.tnhrce.in/ எனும் கோயிலுக்கான இணையதளத்திலிருக்கும் விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து, நிரப்பி, சாதி, மதம், கல்வி மற்றும் வயதுக்கான தகுதிச் சான்றிதழ் நகல்களை இணைத்து “துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை 5” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசிநாள்: 22.7.2016.

உதவித்தொகைபயிற்சிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப் பெற்று சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்குத் தேவையான உணவு, சீருடை, தங்குமிடம் போன்ற வசதிகளுடன் பயிற்சிக்கால உதவித்தொகை போன்றவை வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் படிப்பு தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கீழான வைணவக் கோயில்களில் பணிக்குத் தகுதியுடையதாகும்.

விவரங்கள் அறிய இப்பயிற்சி குறித்த மேலும் விவரங்களை, மேற்காணும் கோயிலின் இணையதளத்தினைப் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம் அல்லது திருக்கோயிலின் அலுவலத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம். அல்லது 044 - 28442449, 28442462 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- தேனி மு.சுப்பிரமணி