பாஸ்போர்ட் வாங்குவது எப்படி?



தகவல் பலகை


*பாஸ்போர்ட் என்பது என்ன?
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்ல பாஸ்போர்ட் (Passport) அவசியம். இது ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது.

*பாஸ்போர்ட்டின் வகைகள்
சாதாரண குடிமக்களுக்கு Ordinary பாஸ்போர்ட், அரசாங்க ஊழியர்களுக்கு Official பாஸ்போர்ட், முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு Diplomatic பாஸ்போர்ட், வியாபார  நோக்கத்திற்காக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு Jumbo பாஸ்போர்ட்  என நான்கு விதமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

*பாஸ்போர்ட் பெறுவதற்கான தகுதிகள்
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். வயதுவரம்பு இல்லை. 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது.  இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல்துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிக்கப்படும்.

*எப்படி விண்ணப்பிப்பது?
பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே பாஸ்போர்ட் பெற்றுவிடலாம்.http://passportindia.gov.in/AppOnlineProject/online/procFormSubOnl என்ற தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் ஆன்லைனில் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். http://passportindia.gov.in/AppOnlineProject/online/appointment என்ற தளத்தில் நேரத்தை அறிந்துகொள்ளலாம். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

*எவ்வளவு கட்டணம்?
பாஸ்போர்ட் பெறுவதில் ஆர்டினரி (Ordinary), தட்கல் (Tatkal) என்ற இரண்டு முறைகள் உள்ளன.10 வருடத்திற்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ரூ.1000. 10 வருடத்திற்கான 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ரூ.1500. தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ரூ.2500. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ரூ.3000. முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், மாற்றுதல் போன்றவற்றிற்கு ரூ.1000.

*புதிய பாஸ்போர்ட் பெற என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?

A) முகவரிக்கான ஆவணம் (கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று- மூன்று நகல்கள்)வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வேலை பார்க்கும் கம்பெனியின் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், குடிநீர்க் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது, சமையல் எரிவாயு இணைப்புக் கட்டண ரசீது, நடப்பு வங்கிக் கணக்கு அறிக்கை, கணவன்/மனைவி பாஸ்போர்ட் நகல், 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்குத் தாய்/தந்தையர் பாஸ்போர்ட் நகல், வீட்டுவரி ரசீதுB) பிறந்த தேதிக்கான ஆவணம் (கீழ்க்கண்டவற்றில் ஏதேனும்் ஒன்று)பிறப்புச் சான்றிதழ், கடைசியாகப் பயின்ற பள்ளிச் சான்றிதழ், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் சான்றிதழ், முதல் வகுப்பு நீதிபதி/அங்கீகாரம் பெற்ற வழக்குரைஞரின் முன் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட பத்திரத்தில் பிறந்த தேதி, பிறந்த இடம் கொடுக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் 26.1.1989க்குப் பின் பிறந்திருந்தால் கண்டிப்பாகப் பிறப்புச்சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

*குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்குப் புதிய / புதுப்பித்தல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

*பிறப்பு/இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் (பாஸ்போர்ட் புதுப்பிக்க பிறப்புச்சான்று தேவையில்லை)
*பெற்றோரின் கையொப்பமிட்ட உறுதிமொழி
*பெற்றோரின் ஒரிஜினல் பாஸ்போர்ட் (சரிபார்த்தபின் திருப்பிக் கொடுக்கப்படும்)
*பெற்றோர் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி 4 பக்கங்களின் நகல்கள்
*குழந்தைக்கு பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் முன் கணவன்/மனைவி பெயர் தாய், தந்தையின் பாஸ்போர்ட்டில் சேர்க்கப்பட வேண்டும். ஒரிஜினல் பாஸ்போர்ட் சரிபார்த்தபின் திருப்பிக் கொடுக்கப்படும்.
*விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து ஆவணங்களும் பெற்றோர் ஒருவர் அல்லது இருவராலும் சுய கையொப்பமிடப்பட வேண்டும்.
*தொலைந்த /பழுதான நிலையில் உள்ள பாஸ்போர்ட்டுகளுக்கு மாற்று பாஸ்போர்ட்டுகள் பெறுதல்
* விண்ணப்பங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தின் வரிசை எண்.II (iv)ல் கட்டாயம் பாஸ்போர்ட்  தொலைந்ததா / பழுதானதா என்று குறிப்பிட வேண்டும்.
* பாஸ்போர்ட் பழுதடைந்திருந்தால் அந்த அசல் பாஸ்போர்ட் இணைக்கப்பட வேண்டும்.
*முந்தைய பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி 4 பக்கங்களின் நகல்கள் விண்ணப்பத்தாரரால் சுய கையொப்பம் இடவேண்டும்.
*எந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் பாஸ்போர்ட் காணாமல் போனதோ அந்த சரக காவல் ஆய்வாளரால் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அசல் நகல், அதை வழங்கிய அதிகாரியின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் அதில் தெளிவாய்க் குறிப்பிடப்பட வேண்டும். அந்த அதிகாரியின் புகைப்பட அடையாள அட்டையின்  நகல்கள் சுய ைகயொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
*பாஸ்போர்ட் வெளிநாட்டில் தொலைந்து அந்த விண்ணப்பதாரர் இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்ட அவசரகால சான்றிதழ் மூலமாக இந்தியாவுக்குத் திரும்பி இருந்தால் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை (இமிகிரேஷன்)
அதிகாரிகளால் வழங்கப்பட்ட அசல் ரசீதையும் இணைக்க வேண்டும்.
*பாஸ்போர்ட் எப்படி எங்கே தொலைந்தது அல்லது பழுதடைந்தது என்ற விவரத்தினை வெள்ளைத்தாளில் கடிதமாக எழுதி பாஸ்போர்ட் அதிகாரிக்கு முக
வரியிட்டுக் கொடுக்க வேண்டும்.
*வெளிநாட்டிற்குச் செல்லத் தடையின்மைச் சான்றிதழ் (ECNR) பெறத் தகுதியுடையவராக இருந்தால் அதற்கான ஆவணங்கள் இணைக்க வேண்டும்.
*முகவரியில் மாற்றம் இருந்தால் அதற்கான அத்தாட்சி ஆவணங்களை இணைக்க வேண்டும்.
*பழைய பாஸ்போர்ட்டில் கணவன் / மனைவி பெயர் இல்லாமல் இருந்து தற்போது திருமணமாகி இருந்தால் திருமணப் பதிவாளரால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் அல்லது அங்கீகாரம் பெற்ற வழக்குரைஞரின் (நோட்டரி பப்ளிக்) முன் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட பத்திரம் இணைக்க வேண்டும்.
*பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் இவைகளில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதற்கான அத்தாட்சி சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

எம்.ஞானசேகர்