வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள் 3
வழிகாட்டுதல்
தேசிய ஆதிதிராவிட நல மற்றும் வளர்ச்சி நிறுவனம்
ஆதிதிராவிடர்களுக்கு ரூ.10 லட்சம் வரை 6% வட்டியில் தொழில் தொடங்க கடன் வழங்குகிறது இந்த நிறுவனம். இங்கு பெண்களுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் தொழில்கடன், கல்விக்கடன், தொழிற்பயிற்சி உதவித்தொகை எனப் பலவகை திட்டங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலக முகவரி; National Scheduled Caste Finance And Dev. Corporation Ltd, Govt. of India, 14th Floor, Scope Minar, Core 1&2 North Tower, Laxmi Nagar Dt. Centre, Delhi - 110092. Phone : 011 22054391; இணையதளம்: www.nsfdc.nic.in இந்நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தொலைபேசி எண்; 044-2615052 புதுச்சேரி அலுவலகத் தொலைபேசி எண் - 0413-2241573.
தேசிய மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி நிதி கார்ப்பரேஷன்இந்திய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு வியாபாரம் செய்ய ரூ. 3 லட்சம், சர்வீஸ் தொழிலுக்கு ரூ.5 லட்சம், வணிக வாகனம் வாங்க ரூ. 10 லட்சம், சிறுதொழில் (தயாரிப்பு) தொடங்க ரூ. 25 லட்சம், விவசாயத்திற்கு ரூ. 10 லட்சம் வரை 5% முதல் 8% வட்டியில் வங்கியின் மூலம் கடன் கொடுக்கிறது. மேலும், பல சிறு கடன் திட்டங்கள் உள்ளன. மூளைவளர்ச்சி குறைந்த குழந்தைகளின் பெற்றோர் சங்கத்திற்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை அலுவலக முகவரி: National Handicapped Finance Development Corporation Govt. of India, Red Cross Bhavan, Sector-12, Faridabad - 121007, Phone: 0129-2287512 இணையதளம்: www.nhfdc.nic.in தமிழகத்திற்கான தொடர்பு முகவரி: எல்.எம். தமிழரசன் சிறப்பு அதிகாரி, தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி, 4(233), என்.எஸ்.சி. போஸ்ேராடு, சென்னை-1 தொலைபேசி: 044-25302345) www.tnscbank.com புதுச்சேரிக்கான தொடர்பு முகவரி: பி. பிரியதர்ஷினி, தலைவர், புதுச்சேரி மாநில பெண்கள், ஊனமுற்றோர் வளர்ச்சிக்கழகம், 30வது கிராஸ் தெரு, பொன்நகர், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி - 10, தொலைபேசி : 0413-2211830
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
இத்துறை பல கடன் திட்டங்களை வகுத்துள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள், கடனுதவிகள் வழங்கு வதோடு ஆலோசனைகளையும் அளிக்கிறது. உழைக்கும் பெண்கள் தங்கும் விடுதி கட்ட 75 சதவீத மானியத்துடன் கடன் வழங்குகிறது. வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகளுக்கு உதவுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் மூலம் ‘பழம், காய்கறி, பதப்படுத்தும் பயிற்சிகள்’ அளித்து தொழில்முனைவோருக்கு உதவுகிறது.
இத்துறையின் தலைமை அலுவலகம்: Ministry of Women and Child Welfare, Sastri Bhavan, Dr. Rajendra Prasad Road, New Delhi - 1. Phone : 011-2338356 இணையதளம்: www.wcd.nic.in இத்துறைக்கு, சென்னை-34, ஹாடோஸ் ரோடு, சாஸ்திரி பவனில் துணை இயக்குநர் அலுவலகமும், சென்னை-98. பெசன்ட் நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ராஜாஜி பவனில் சமுதாய உணவு பதப்படுத்தும் பயிற்சி மையமும் உள்ளன.
கைத்தறி வளர்ச்சித் துறை கைத்தறி குழுமங்கள் தொடங்க கடனுதவி, சந்தைப்படுத்த உதவி, நெசவாளர் பயிற்சி மையங்கள், காப்பீட்டுத் திட்டங்கள், கண்காட்சி வைத்து கைத்தறி பொருட்களை விற்க உதவி, கைத்தறி உரிமையாளர்கள் புதிய தொழில் நுணுக்கத்தைக் கற்க உதவி, கடனுதவி எனப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுள்ள நிறுவனம் இது. கைத்தறியைத் தொழிலாகக் கொண்டவர்கள் இந்நிறுவனத்தின் திட்டங்களைப் பயன்படுத்தலாம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம்: Development Commissioner for Handlooms, Govt of India 56, Office of D.C. (Handloom), Udyog Bhavan, New Delhi-11. Phone:011-23062945, www.handlooms.nic.in இந்நிறுவனத்தின் தமிழக அலுவலக முகவரி - H.H.E.O of India Ltd., 31/32 தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32. தொலைபேசி : 044-22255654.
கயறு வாரியம் கயறு தயாரிப்பாளர்கள், தொழில் முனைவோருக்குப் பயிற்சி, தொழில் தொடங்க கடன், ஏற்றுமதியை ஊக்குவிக்க கடன் எனப் பல உதவிகள் வழங்குகிறது இந்நிறுவனம். கயிறு தொடர்பான தொழில் செய்வோர், செய்ய விரும்புவோர் இந்நிறுவனத்தை அணுகலாம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம்; Coir Board, Coir house, M.G. Road, Ernakulam, Kerala-682016, Phone: 0482-2351807 இணைய தளம்: www.coirboard.nic.inஇந்நிறுவனத்தின் கிளை அலுவலகத் தொடர்பு எண்கள் : பொள்ளாட்சி -0459-22450, சிவகங்கை 04577-2411357, தஞ்சாவூர் 04362-264655
எம்.ஞானசேகர்
|