போட்டித் தேர்வுகள் பற்றி சில புரிதல்கள்..!



உத்வேகத் தொடர்

வேலை வேண்டுமா? 8


இந்தியாவில் உயர்கல்வியைத் தொடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. ‘படிப்பு முடித்து வேலை கிடைக்கவில்லை’ என வருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

ஆனால், எங்களுக்குத் தகுதி வாய்ந்த ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற தொழில் நிறுவனங்களின் கவலையும் விரிந்துகொண்டேதான் போகிறது. போட்டி அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களை 100 சதவீதம் தகுதி வாய்ந்தவர்களாகவே தேடத் தொடங்குகிறார்கள். அது தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளாத இளைஞர்களுக்கும் பின்னடைவை உருவாக்குகிறது.

அரசு நிறுவனங்களிலும் இந்த நிலை தான். ஏராளமான இளைஞர்கள் படிப்பை முடிக்கிற நிலையில், தகுதியும், திறமையும் வாய்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்கின்றன. அவற்றில் ஒன்று தான் போட்டித் தேர்வுகள். மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள் போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றில் சில முக்கியத் தேர்வுகளைப்பற்றி பார்ப்போம்.

1.யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission-UPSC) நடத்தும் தேர்வுகள்
2.தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TamilNadu Public Service Commission-TNPSC) நடத்தும் தேர்வுகள்
3.ஸ்டாப் செலக்சன் கமிஷன் (Staff Selection Commission-SSC) நடத்தும் தேர்வுகள்
4.ரெயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு (Railway Recruitment Board-RRB) நடத்தும் தேர்வுகள்
5.வங்கித் தேர்வுகள் (Bank Examinations)

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுகள்மத்திய அரசு தங்கள் நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்காகத் தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்புதான் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்.

இந்த அமைப்பு,  தகுதி வாய்ந்த பணியாளர்களைக் கண்டுபிடித்து நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப பணியமர்த்த உதவு கிறது. மத்திய அரசு ஊழியர்களின் பதவி நியமன முறைகள் பற்றி தீர்மானிக்கும் பணியையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.யு.பி.எஸ்.சி. நடத்தும் சில முக்கியத் தேர்வுகள்

* சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examination)
* எஞ்சினியரிங் சர்வீசஸ் தேர்வு (Engineering Services Examination)
* இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் / இந்தியன் ஸ்டட்டிஸ்டிக்கல் சர்வீஸ் தேர்வு  (Indian Economic Service / Indian Statistical Services Examination) 
* இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வு (Indian Forest Service Examination)
* ஜியாலஜிஸ்ட் தேர்வு (Geologists Examination)
* நேஷனல் டிபன்ஸ் அகாடமி அண்ட் நேவல் அகாடமி தேர்வு  (National Defence Academy and Naval Academy Examinations)
* கம்பைன்டு டிஃபென்ஸ் சர்வீசஸ் தேர்வு (Combined Defence Services Examination)
* ஸ்பெஷல் கிளாஸ் ரெயில்வே அப்ரெண்டிசஸ் தேர்வு (Special Class Railway Apprentices’ Examination)
* கம்பைண்டு மெடிக்கல் சர்வீசஸ் தேர்வு (Combined Medical Services Exam)

 இந்திய அளவில் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஒவ்வோராண்டும் நடத்தப்படும். இந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படுகின்றன? தேர்வு எழுதுவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை? எந்தெந்த பதவிகளுக்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன? தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும்? எவ்வளவு செலவு ஆகும்? தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகத் தெரிந்து வைத்துக்கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுந்த பயிற்சிக்குப் பின்னர் நேரடியாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் போன்ற பணிகளில் சேர்த்துக்கொள்ளப்
படுகிறார்கள். இவைதவிர, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அஞ்சல்துறை, பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை, தகவல் துறை, காவல் துறைகளில் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தவிர, புதுச்சேரி சிவில் சர்வீசஸ் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல்வேறு மத்திய அரசு பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம்நிரப்பப்படும் துறைகள்

* இந்திய ஆட்சிப்பணி - Indian Administrative Service - I.A.S
* இந்திய அயல்நாட்டுப் பணி - Indian Foreign Service - I.F.S
* இந்திய காவல் பணி - Indian Police Service- I.P.S
* இந்திய தபால், தந்தி கணக்கு மற்றும் நிதிப்பணி, தொகுதி - A - Indian P and T Accounts  and Finance service, Group - A
* இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, தொகுதி- A - Indian Audit and Accounts Service ,Group- A
* இந்திய வருவாய் பணி, [சுங்கம் மற்றும் மத்திய வரிகள்] தொகுதி-A - Indian Revenue Service  [Customs and  Central Excise] Group -A
* இந்திய பாதுகாப்பு கணக்குகள் பணி, தொகுதி-A -  Indian Defence Accounts Service, Group- A
* இந்திய வருவாய் பணி [ஐ.டி] தொகுதி-A - Indian Revenue Service & (I.T.) Group -A
* இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி, தொகுதி-A [உதவி மேலாளர், நிர்வாகம்]-  Indian Ordnance Factories Service, Group - A) (Assistant Works Manager, Administration
* இந்திய அஞ்சல் பணி, தொகுதி-A-  Indian Postal Service, Group-A
* இந்திய குடிமை கணக்குப் பணி, தொகுதி-A - Indian Civil Accounts Service, Group-A
* இந்திய ரெயில்வே போக்குவரத்துப் பணி, தொகுதி-A - Indian Railway Traffic Service, Group-A
* இந்திய ரெயில்வே கணக்குப் பணி, தொகுதி-A - Indian Railway Accounts Service, Group-A
* இந்திய ரெயில்வே பணியாளர் சேவை, தொகுதி-A  - Indian Railway Personnel Service Group- A
* ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு அலுவலர், தொகுதி-A - Assistant Security Commissioner in Railway Protection Force Group - A
* இந்திய பாதுகாப்பு வளாகப் பணி, தொகுதி -A  Indian Defence Estates Service, Group -A
* இந்திய தகவல் பணி [இளநிலைத் தரம்] தொகுதி -A - Indian Information Service [Junior Grade] Group-A
* இந்திய வணிகப் பணி, தொகுதி - A, [தரம் - III] - Indian Trade Service   Group -A - (Gr. III)
* இந்திய நிறுவன சட்டப்பணி, தொகுதி-A - Indian Corporate Law Service, Group - A
* ஆயுதப்படை தலைமை குடிமைப் பணி, தொகுதி -B[அலுவலர் பிரிவு] - Armed Forces Headquarters Civil Service, Group -B (Section Officer`s   Grade)
* டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி குடிமைப் பணி, தொகுதி B- Delhi, Andaman and Nicobar Island, Lakshadweep, Daman, Diu, Dadra and Nagar Haveli Civil Service, Group-B
* டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி காவல் பணி, தொகுதி -B - Delhi, Andaman and Nicobar Island, Lakshadweep, Daman, Diu, Dadra and Nagar Haveli Police Service, Group -B
* பாண்டிச்சேரி குடிமைப் பணி, தொகுதி -B - Pondicherry Civil Service, (Group -B)
* பாண்டிச்சேரி காவல் பணி, தொகுதி -B Pondicherry Police Service, (Group - B)

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பணிகளிலும் நேரடியாகச் சேர விரும்புபவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும். ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 29 துறைகள் சார்ந்த உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. பணியிட எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத விரும்புபவர்களுக்கான கல்வித் தகுதிகள், வயதுவரம்பு, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்

(தேடுவோம் வேலையை...)

நெல்லை கவிநேசன்