அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!
மொழி
Childlike-Childish என்ன வித்தியாசம்?
ரகு அப்போது தான் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவரை எதிர்கொண்ட ரவி, சார்... என் ஜூனியர் சஞ்சீவி பேப்பர்ல ஏதோ தப்பு செஞ்சு கிளைன்ட்கிட்ட மாட்டிக்கிட்டான் சார்... எம்.டி. என்னை கடுமையா திட்டிட்டார்...
அவனோட நடவடிக்கைகள் எல்லாமே ‘Childlike’- ஆ இருக்கு சார்...” என்று பொரிந்து தள்ளினான்.அவனது தோள்மீது கைபோட்ட ரகு... “ஏன் டென்ஷனாகுறீங்க ரவி... நானும் அவனை தொடர்ந்து கவனிச்சுக்கிட்டுத் தான் வாரேன். அவன் செயல்பாடுகள் எல்லாமே ‘Childlike’- ஆ இல்லை, ‘Childish’ -ஆ இருக்கு...” என்றார்.
கொஞ்சம் கூலான ரவி, “சார்... childlike... Childish... ரெண்டுக்கும் என்ன சார் வித்தியாசம்...?” என்றான். “ ‘Childlike’ என்பதில் ஒரு ‘இனசன்ஸ்’ (Innocence-அறியாமை) இருக்கும். ‘Childish’ என்பதில் ஒரு ‘இடியசி’ (Idiosy-முட்டாள்தனம்) இருக்கும். ‘Chlid like’-ன்னா ‘Like a child’-ன்னும், ‘Childish’-ன்னா ‘Foolish’-ன்னும் புரிஞ்சுக்கலாம்...” என்றபடி தன் இருக்கையில் அமர்ந்தார் ரகு. “Excellent sir. So my activities can be childlike... but should not be childish… இல்லைங்களா சார்?” என்றபடி அவர் எதிரில் அமர்ந்த ரவி, மேசையில் இருந்த செய்தித்தாளை எடுத்துப் புரட்டினான். ஒரு ரெடிமேட் கடை விளம்பரம் அவனை ஈர்த்தது.
“சார்... இங்க ‘Readymade Clothes‘-ன்னு போட்ருக்கு... clothக்கு பக்கத்துல ‘e’ வருமா?” என்றான் ரவி. “கண்டிப்பா வரணும் ரவி... ‘Cloth’-ன்னா தைக்கப்படாத துணி. ‘Clothe’-ன்னா தைக்கப்பட்ட ஆடைன்னு பொருள். அதே மாதிரி உச்சரிப்பில் கூட வேறுபாடு உண்டு. ‘Cloth’-ங்கிறதை ‘க்ளாத்’-ன்னும் ‘Clothe’-ங்கிறதை ‘க்ளோத்’-ன்னும் உச்சரிக்கணும்...” ”அப்போ Bath- Bathe... இந்த ரெண்டு வார்த்தைக்கு இடையில இப்படி ஏதாவது வித்தியாசம் இருக்கா சார்?” என்றான் ரவி “நிச்சயமா இருக்கு. We bathe (பேத்) generally in bath (பாத்)room. (பொதுவாக நாம் குளியலறையில் குளிக்கிறோம்) ‘Bathe’-ங்கிறது குளித்தல் என்ற வினைச்சொல். ‘Bath’-ங்கிறது குளியல் என்ற பெயர்ச்சொல்/பெயருரிச்சொல்...” என்ற ரகு, ரவிக்கு ஒரு தேர்வு வைத்தார்.
“ரவி... இப்ப நான் சொல்ற வார்த்தைகளில் உள்ள சிமிட்ரி (Symmetry) என்னன்னு சொல்லு பார்ப்போம். education, behaviour, miscellaneous, endocardium, aeronautics, oleaginous, outpatient, ultraviolet, uncommunicative. அதாவது, இந்த வார்த்தைகளில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன?” விழித்தான் ரவி. “போய் எம்.டியை சமாதானப்படுத்துங்க... அப்புறம் பேசுவோம்...” என்றபடி லேப்டாப்பில் மூழ்கினார் ரகு.
சேலம் ப.சுந்தர்ராஜ்
|