வலைப்பேச்சு



* ‘‘வேளச்சேரியில் மழை வந்தால், 7 அடி தண்ணி நிக்கும்; ஆட்கள் எல்லாம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லதான் இருக்கணும். அதான் சார் கிச்சனை ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல டிசைன் பண்ணி இருக்கோம்.அதே போல கீழ கார் இருந்தா கார் நாசம் ஆய்டும் சார்,

அதான் கார் பார்க்கிங் கூட ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல டிசைன் பண்ணி இருக்கோம். இதான் சார் நல்ல மாடல் ஹோம்!’’- இது இப்போ டி.வி.யில் பார்த்த பழைய ‘வந்தான் வென்றான்’ பட (ஒரு தப்பான மாடல் வீட்டை நியாயப்படுத்தும்) வசனம். சிலவற்றை மனிதன் முன்கூட்டியே கணிக்கிறான்தான்!

- குமரன் கருப்பையா

@maninilats 
அம்மா அழைப்பு மையம் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
# நீங்கள் முதலில் ‘‘அம்மா’’ என்று சொல்லாமல் ‘‘ஹலோ’’ என்று சொன்னதால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது!

@RajiTalks 
எளிமையான முறையில் சாம்பார் சாதம் செய்வது எப்படி!?
# குக்கரில் சாதம் வைக்கவும்; பக்கத்து வீட்டில் கொஞ்சம் சாம்பார் வாங்கி பிசைந்து கொள்ளவும்!

பேங்க்ல பணம் போடுறவன் வரிசையில நின்னுக்கிட்டு இருப்பான். கடன் வாங்குறவன் மேனேஜருக்கு எதிர்ல சொகுசா உக்கார்ந்திருப்பான். புரியாத உலகம்!

* உலகத்துலயே ஆகச்சிறந்த அறிவாளி யாருன்னா, ஊரு
ஒலகத்துக்கே தெரிஞ்ச தன் மொபைல் நம்பரை பாஸ்வேர்டா யூஸ் பண்றவன்தான்...
‪#‎ ஏன்னா‬ ஈஸியா மறக்காதாம்!
- குமரேஷ் சுப்ரமணியம்

* சரக்கடிச்சத கண்டுபுடிக்கக் கூடாதுன்னு விக்ஸ் மிட்டாய மென்னுட்டேதான் போனேன். அப்புடியும் கண்டுபுடிச்சிட்டாங்க... கைய தரைல ஊனி நடந்தா தப்பாம்!
- ரிட்டயர்டு ரவுடி

* விதி எண் 1100ன் கீழ் இனி அனைத்துக் குறைகளும் தீர்க்கப்
படும்.
- செல்வ குமார்

* சீன பொம்மையைஅரபியக்கடையில் ஐரோப்பியருக்குவிற்கிறார்...
மலையாளம் பேசுபவர் ஆங்கிலத்தில்!‪#‎ இவ்வளவுதான் உலகம்‬
- சுமிதா ரமேஷ்

@writernaayon 
பிரசவ வலிதான் உச்சபட்ச வலியாம். அறையின் வெளியே நிற்கும் ஆணின் மனவலியைக் குறைத்து எடை போடாதீர்.

அம்மா கால் சென்டர்...

அம்மா ஒயின்ஷாப்புக்கு பிரஸ் 1
அம்மா தண்ணிக்கு
பிரஸ் 2
அம்மா ஹோட்டலுக்கு பிரஸ் 3
அம்மா ஸ்டிக்கருக்கு பிரஸ் 4
அவதூறு வழக்குக்கு பிரஸ் 5

@Naagu_twits 
‘‘சாப்பிட்டுத்தான் வந்தேன்’’ என அரிச்சந்திரனையும் பொய் சொல்ல வைத்து விடும், சில உறவினர்களின் ‘‘சாப்பிடறீங்களா?’’ என்ற கேள்வி...

ஒரு திரைப்பட விமர்சனக் கட்டுரையை தாண்டிச் செல்கையில் தட்டுப்பட்ட வரிகள் இவை... ‘அடிமைகள் மீது நிகழ்த்தப் பெறும் வன்முறை, இருமை
யுறுதிகள் மீதான சிதைவாக்கச் செயலாய் மட்டும் இல்லாமல் உளவியலில் பதிவாக்கும் ஞாபகவண்டல் மற்றும் அதன் செலுத்து இயல்பு கவலைக்குரியது...’
# எனக்கென்னமோ தமிழின் நிலைதான் ரொம்பவும் கவலைக்குரியது என்று தோன்றியது.
- பாஸ்கர் சக்தி

@CreativeTwitz  
என்னைக்
கொன்ற
உன்னை
என் பிள்ளைகள்
தூங்கவிடாது
என்று
சாபமிட்டுச்
செத்தது
#கொசு

@Ramya_muralii 
கோவத்துல நாக்கு வேலை செய்யற அளவுக்கு மூளை வேலை செய்யறதில்ல!

@sheik_twitts 
‘ஆனந்தம்’ படத்துல அப்பாஸ் சினேகாவுக்கு 1 ரூபாய் குடுத்து லவ் பண்றாரு. உலகத்துலயே இம்புட்டு கம்மியா செலவு பண்ணி காதலிச்சது அப்பாஸ் மட்டும்தான்...

 ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் - இங்கிலாந்து அதிரடி.
# எங்க ஊர் கான்வென்ட்களில் இந்தச் சட்டம் எப்பவோ அமலுக்கு வந்து விட்டது. தமிழில் பேசினால் உடனே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. எங்க தமிழ்நாட்டில், எங்க தாய்மொழியை விட, உங்க தாய்மொழிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க...
- இளையராஜா அனந்தராமன்

படத்தோட டைரக்டர்கிட்டவே டொரன்ட் லிங்க் கேக்குறாங்க,
எந்த மாதிரி சமூகத்துல வாழுறோம்!

பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்துவது மாபெரும் கொள்ளை.
2008 ஜூலை 3ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர். இதுதான் இதுவரை உச்ச விலை. அந்த தேதிக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.07. டீசல் விலை ரூ.37.13. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 42 டாலர். ஆனால் பெட்ரோல் விலை ரூ.61. டீசல் விலை ரூ.48.

ஒரு பேரல் என்பது 160 லிட்டர் கச்சா எண்ணெய். இதிலிருந்து 21 லிட்டர் பெட்ரோல், 80 லிட்டர் டீசல், 6.5 கிலோ எரிவாயு எடுக்கப்படுகிறது. இவை போக மீதமிருப்பது மண்ணெண்ணெய், நாப்தா, டர்பன்டைன், மசகு ஆயில் போன்ற உபரிப் பொருள்களாக மாறுகின்றன. இவை பெட்ரோல், டீசலை விட அதிக விலைக்குப் போகின்றன. இது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் கணக்கு. நாட்டுக்கு நாடு இந்த அளவு மாறுபடும்.
அதாவது வெறும் ரூ.2520 கொடுத்து வாங்கப்படும் ஒரு பேரல் கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் இப்போது பெறப்படும் வருவாய்...

21 லிட்டர் பெட்ரோல்: 1281.42
80 லிட்டர் டீசல்: 3840.00
6.5 கிலோ எல்.பி.ஜி.: 2634.45
இதர பொருட்கள் மதிப்பு: 2000
மொத்தம்:            ரூ. 9755.87.

இதில் சுத்திகரிப்புச் செலவு ரூ.494. இதைக் கழித்துவிட்டால் ஒரு பேரலிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் உப பொருள்கள் மூலம் மொத்தம்: ரூ.9261.87 கிடைக்கிறது. மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலையைக் கழித்துவிட்டால் ரூ.6741.87 கிடைக்கிறது.
இதில் 45-50 சதவீதம்தான் பெட்ரோல் / டீசலின் விலை. மீதி மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மூலம் வருவது.

 பெட்ரோல் விலையில் 55 சதவீதம் வரிகள்தான்.
சுங்க வரி: 4 சதவீதம்
ஆயத் தீர்வை: 25 சதவீதம்
வாட்: 17 சதவீதம்
டீலர் கமிஷன்: 2 சதவீதம்
கல்வி செஸ்: 2 சதவீதம்

* டீசல் விலையில் 39 சதவீதம் வரிகள்தான்.
சுங்க வரி: 7 சதவீதம்
ஆயத் தீர்வை: 13 சதவீதம்
வாட் : 12 சதவீதம்
டீலர் கமிஷன்: 2 சதவீதம்
கல்வி செஸ்: 2 சதவீதம்
சில மாநிலங்களில் ஆக்ட்ராய் எனப்படும்
உள்நுழைவு வரி விதிப்பார்கள். அங்கே விலை இன்னும் அதிகம்.

சுத்திகரிப்புச் செலவுடன் சேர்த்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இன்றைய நிலவரப்படி 3014 ரூபாய்தான். இதில் பெட்ரோல் லிட்டர் ரூ.22, டீசல் லிட்டர் ரூ.18 என விலை வைத்தாலும் மொத்தம் ரூ.3852 வரை வருகிறது. வாங்கியதை விட ரூ.850 வரை லாபம், ஒரு பேரலுக்கு.
ஆனால், இவர்கள் எப்படி விலை நிர்ணயித்திருக்கிறார்கள் பாருங்கள்...
பெட்ரோல் விலை ரூ.32 + வரிகள் (லிட்டருக்கு ரூ.10 அதிகம்).
டீசல் விலை ரூ.28 + வரிகள் (லிட்டருக்கு ரூ.10 அதிகம்).

இப்படி லிட்டருக்கு எண்ணெய் நிறுவனமே ரூ.10 கூடுதலாக வைத்து விற்கிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட 50 சதவீதம் பல்வேறு வரிகளை விதிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். அனைத்து வரிகளையுமே சேர்த்து ரூ.30க்கு பெட்ரோலை, ரூ.22க்கு டீசலை விற்றாலுமே எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம்; அரசுகளுக்கும் போதிய வருமானம் கிடைக்கும். ஆனால் கண்மூடித்தனமாக உச்சபட்ச விலையை நிர்ணயித்து மக்களின் வருமானத்தை உறிஞ்சுகின்றன எண்ணெய் நிறுவனங்களும் அரசுகளும்.

பெட்ரோலியத் தொழிலில் இருக்கும் இந்திய முதலாளிகள் சம்பாதிப்பதற்காக இந்திய மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது. இந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கானவர்கள் அல்ல, பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள்.
குறிப்பு: அனைத்தும் இப்போதைய விலை, இப்போதைய சுத்திகரிப்புச் செலவு, இப்போதைய வரிகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்டவை!

@mani_kuttans 
கடன் இல்லாத வாழ்க்கையை கடவுளாலே வாழ முடியல, நாமெல்லாம் எம்மாத்திரம்...

@mofra2 
‘‘இனி பேச ஒன்றுமில்லை’’ என்ற சொற்களில்தான் அடங்கியிருக்கிறது பேச வேண்டிய அத்தனையும்.

காணும் ஒவ்வொரு குழந்தையின் முகத்தையும், அது அந்தக் குழந்தையின் முகமென ஒப்புக்கொள்ளாமல், அபத்தமாய் யாரோ ஒருவரைத் தேடி, யாரோ போல் இருப்பதாய் அறிவிக்கவும் செய்கிறோம்!
- ஈரோடு கதிர்

 ஒரு மாணவனுக்கு எதிராக ஒரு மத்திய அமைச்சர் கல்லூரி நிர்வாகத்திற்கு 6 முறை நேரடியாகக் கடிதம் எழுதுகிறார். எந்த அறிவின் அடிப்படையில் அந்த மாணவனை அரசியல் பேசக்கூடாதென்று சொல்கிறீர்களென விளங்கவில்லை.
- பிரபல எழுத்தாளர்

 சோ உடல்நிலை தேறி வந்ததில் மிக்க மகிழ்ச்சி! கடந்த நான்கரை ஆண்டு கால செலக்டிவ் அம்னீஷியாவிலிருந்து மீண்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன்!
- எழிலன் எம்

 ஜல்லிக்கட்டு எவ்ளோ நல்ல வீர விளையாட்டு... இந்த வருஷம் ஒரு மாட்டையாவது அடக்கிடலாம்னு பாத்தா... பிளே ஸ்டோர்ல ஒரு ஜல்லிக்கட்டு கேம்கூட இல்ல!
- செல் முருகன்

@mofra2 
அம்மா சொன்ன அழகான பொய்களில் ஒன்று... கடைசி சோறுலதான் சத்து இருக்காம்!

@Im__Joshi 
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: ஜெ.
# நிபந்தனைகள்: நிற்கும்போதும் நிமிரக்கூடாது. பதவி ஏற்கும்போது அழணும்...

அக்கா என்ற வார்த்தை ஆன்ட்டி என்ற வார்த்தைக்கு மிக மிக அருகாமையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
- இரா.கஸ்தூரி