ஜோக்ஸ்



‘‘அந்த மந்திரவாதியை ஏன் கைது பண்றாங்க..?’’
‘‘பேயை ஓவர் ஸ்பீடுல
ஓட்டினாராம்!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘கபாலி ஏதோ ஹைக்கூ சொல்லிட்டுப் போறானே... என்ன அது?’’
‘‘மாமூல்கள் பிறப்பதில்லை... உருவாக்கப்படுகின்றன என சொல்லிட்டுப் போறான்!’’
- பர்வீன் யூனுஸ்,
ஈரோடு.

‘‘படத்துல நிறைய ‘பஞ்சு’ டயலாக் வருது...’’
‘‘பஞ்ச் டயலாக் கேள்விப்பட்டிருக்கேன்... அது என்ன ‘பஞ்சு’ டயலாக்?’’
‘‘டயலாக் ஒரே அசிங்கமா இருக்கும். காதுல பஞ்சு வச்சுக்கணும்!’’
- வி.சாரதி டேச்சு,
சென்னை-5.

‘‘உடனே 15,474 ரூபா கவுன்ட்டர்ல கட்டச் சொல்றீங்களே டாக்டர்... அதெப்படி பர்ஸ்ல இருக்குற தொகையைத் துல்லியமா கேட்கறீங்க?’’
‘‘அதுக்கெல்லாம் ஸ்கேன் வச்சிருக்கோம்யா!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘நீஇவரிடம் பணத்தைப் பறிச்சியா..?’’
‘‘இல்ல எசமான், அவராதான் குடுத்தாரு! நான் கத்தியை மட்டும்தான் காட்டினேன்...’’
- எஸ்.எலிஸபெத் ராணி, மதுரை.

சுவையா இருக்கணும்னு பருப்பு குழம்பு வைக்கலாம்; குளிர்ச்சியா இருக்கணும்னு வெந்தயக் குழம்பு வைக்கலாம். சூடா இருக்கணும்னு அக்னிக் குழம்பு வைக்க முடியுமா?- ஏறும் விலைவாசியைக் கண்டு எரிமலைக் குழம்பாய் கொதிப்போர் சங்கம்
-டி. செல்வன்,நெல்லையப்பபுரம்

ஸ்பீக்கரு...

‘‘தலைவர் மேடைக்கு வருவதால் பணம் வாங்கிய அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டுகிறேன்...’’
- தாமு, தஞ்சாவூர்.