திட்டம்
‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி. கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது.
 ‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்ல வேலை கேட்டேன். இல்லைனு சொல்லிட்டீங்க. அதான் மாஸ்டர் வராத நேரமா பார்த்து வந்தேன்.
சாப்பிட்டுட்டு காசு இல்லாத மாதிரி நாடகம் ஆடி, என் திறமையை நிரூபிச்சு பரோட்டா மாஸ்டராவும் ஆகிட்டேன். என் திட்டம் பலிச்சுருச்சு!’ என மனதில் நினைத்தபடி சந்தோஷமாய் வேலை செய்ய ஆரம்பித்தான் புது பரோட்டா மாஸ்டர் கணேசன்.
கே.ஆனந்தன்
|