ஜோக்ஸ்



‘உங்களுக்கு வந்திருக்கற நோயோட பேரு...’’
‘‘அதெல்லாம் வேண்டாம் டாக்டர்! புதுசா வந்திருக்கற நர்ஸோட பெயரை மட்டும் சொல்லுங்க..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘கபாலி நிறைய டி.வி. சீரியல் பார்ப்பானோ..?’’
‘‘ஏன் கேக்கறே..?’’
‘‘வீட்டுக்கு வந்தப்ப, விளம்பர இடைவேளை விட்டு திருடினானே..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

தத்துவம் மச்சி தத்துவம்

தேசியக் கொடிய பறக்க விடலாம்; கட்சிக் கொடிய பறக்க விடலாம்... தொப்புள் கொடிய பறக்க விட
முடியுமா?
- இருக்குறத விட்டுட்டு
பறக்குறத புடிக்க
நினைப்போர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

என்னதான் கோடீஸ்வரன் வீட்டு நாயா இருந்தாலும், அதுக்கு நாய் பிஸ்கெட்தான் சாப்பிடறதுக்குக் கொடுக்கணும்; தங்க பிஸ்கெட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்ல முடியாது!
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘சத்து குறைஞ்சு போச்சுன்னு என்கிட்ட ரெண்டு வருஷமா ட்ரீட்மென்ட் எடுக்குறீங்களே, இப்போ எப்படி இருக்கு?’’
‘‘என் சொத்தும் குறைஞ்சு போச்சு டாக்டர்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘என் வீட்டுக்குத் திருட வந்தவனுக்கு என் மனைவியைப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கணும் சார்..!’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘கத்திக்குப் பதிலா கரப்பான்பூச்சியைக் காட்டி மிரட்டி இருக்கான் சார்..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘கூட்டணி பத்தி உங்க தலைவர் பிடி குடுத்தே பேச மாட்டேங்கிறாரே...’’
‘‘பெட்டி கொடுங்க, பேசுவார்..!’’
- சரவணன், கொளக்குடி.