விஷாலுக்கு ஆள் இருக்காங்க பாஸ்!
சிருஷ்டி டாங்கே சீக்ரெட்
‘புத்தம் புதுக் காலை.. பொன்னிற வேளை...’யாக செம ஃப்ரெஷ் போட்டோஷூட் பண்ணியிருக்கிறார் சிருஷ்டி டாங்கே. ‘வில் அம்பு’, ‘கத்துக்குட்டி’, ‘நவரச திலகம்’, ‘அச்சமின்றி’, இவைதவிர டைட்டில் வைக்காத படங்கள் இரண்டு என சிருஷ்டியின் சினி கேரியர் ரொம்ப புஷ்டி. என்ன கேள்வி கேட்டாலும் கன்னக்குழி விழ, சிரிக்குது பொண்ணு!
 ஷூட்டிங் இல்லன்னா? ‘‘அப்பாவோட ஃப்ரெண்ட் பைக்ல மும்பையை சுத்துறது பிடிக்கும்!’’
பிடிச்ச வாட்ஸ் அப் ஜோக்? ‘‘ஜோக் பிடிக்காது. எது வந்தாலும் உடனே டெலிட்தான்!’’
சிருஷ்டி ஓகே... அதென்ன டாங்கே? ‘‘ எங்க அப்பாவோட ஃபேமிலி நேம்!’’
 இதுவரை வந்த லவ் ப்ரபோசஸ்ல பெஸ்ட் எது? ‘‘பெஸ்ட் இன்னும் வரலை... வெயிட் பண்றேன்!’’
பிடிச்ச ஃபுட்? ‘‘சாப்பாட்டுல எதையும் வேணாம்னு சொல்ல மாட்டேன்!’’
 லவ் பண்ணியிருக்கீங்களா? ‘‘ம்ம்ம்... படங்கள்லதானே!’’
காதல்..? ‘‘1980ஸ், 90ஸ் லவ் மாதிரியெல்லாம் இப்போ எங்கே இருக்கு?’’
கிஸ்..? ‘‘அதைப் பத்தி வெறுமனே சொல்ல என்ன இருக்கு?’’
|