மைல் கல்!



‘கிச்சன் to கிளினிக்’ உணவு விழிப்புணர்வுத் தொடர் வாரா வாரம் எங்கள் இல்லங்களுக்கு வந்த அக்கறையான டாக்டர் போலிருந்தது. ஒரு நல்ல பகுதி விரைவில் முடிந்துவிட்ட ஏக்கம் தவிர்க்க முடியாதது.
- எஸ்.மரியா சார்லஸ், கன்னியாகுமரி.

கைதிகளுக்கு கல்வி போதிப்பது சாதாரணமல்ல. அதைச் செய்து வரும் ‘கறுப்புச் சட்டை வாத்தியார்’ ராசேந்திரனின் கல்விப் பணியும் லேசுப்பட்டதல்ல. தொடரட்டும் அவர் தொண்டு!
- இரா.வளையாபாதி, தோட்டக்குறிச்சி.

எமி ஜாக்சனே ஒரு மல்‘கோவா’... அவருக்குப் பிடித்த இடம் கோவாவா? செம பொருத்தம். சுண்டியிழுக்கிற எமியின் போட்டோவைப் பார்த்து சுருண்டு விழுந்துட்டேன் தலைவா!
- சி.பி.தண்டபாணி, சீர்காழி.

சூரிய நமஸ்காரம் ஏன் செய்யவேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? பயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன? என கம்ப்ளீட் தகவல்கள் தருவது கலக்கல்!
- இரா.ரோஸ்மேரி, நாகை.

நரிக்குறவர்களின் வாழ்வு, மொழி, உட்பிரிவுகள் எனப் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது சிவ.சித்திரைச்செல்வனின் ‘நாடோடி’
ஆவணப்படம். வாழ்த்துகள்!
- ஜி.அருமைநாயகம், திருநெல்வேலி.

‘தாகத்தில் தவிக்கும் தமிழகம்’ கட்டுரை பொதுமக்களின் உண்மையான குமுறலையும் அரசின் அலட்சியப் போக்கையும் சுட்டிக் காட்டியது. இந்த நாட்டில் கண்ணீருக்குத்தான் பஞ்சமில்லை போல!
- எஸ்.சுமதி சுந்தரம், சேலம்.

கமலின் ‘தூங்காவனம்’, அவர் திரையுலக சாதனைகளில் இன்னுமொரு மைல்கல். படத்தைப் பற்றி படிக்கும்போதே வெள்ளித் திரையில் காணும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
- கோ.சு.சுரேஷ், கோவை.

‘ஏமாந்து போனேன்’ என்று சொல்வதற்கு கூச்சப்பட்டே ‘விட்டுக்கொடுத்து விட்டேன்’ எனச் சொல்கிறோம்... இப்படிப்பட்ட வைர வரிகளால் மிளிர்கிறது ‘வலைப்பேச்சு’.
- கே.கோவிந்தசாமி, விழுப்புரம்.

‘பிச்சைக்காரன்’ - பேர்தான் இப்படி. பட ஸ்டில்களும் விஜய் ஆண்டனியின் பேட்டியும் படு ரிச். அதுவும் அறிமுக நாயகி ‘சத்னா டைட்டஸ்’ அரபுக் குதிரைதான் போங்க!
- எச்.பால்பாண்டி, திருப்பூர்.

‘தண்ணி, தம் இல்லாதிருந்தாலே போதும்... வாழ்க்கை பாதி வெற்றி’ என்ற மைம் கோபியின் கூற்று சிந்திக்க வைத்தது! பேச்சுலர் ரூம்களில் இதை எழுதி மாட்டலாம்!
- டி.வி.சுந்தரவடிவேலன், கடலூர்.