கவிதைக்காரர்கள் வீதி
*அந்த அகன்ற சாலையின் முடிவில் எனக்கு முன்பாக ஊர் போய்க்கொண்டிருந்தது தொடுவானம்! - சங்கீதா, மோகனூர்.
 * எவையேனும் நான்கினுக்கு விடையளி என்ற வினாத்தாளை பார்க்கும்போதெல்லாம் உன் மௌனம் நினைவில் வருவது எனக்கு மட்டுமா... உனக்கும்தானா? - வினையன், சென்னை-40.
* கொக்கொன்று ஒற்றைக் காலில் தவமிருந்தது ஓடாத நதியில் மீனுமில்லை... நீருமில்லை... காலூன்ற மணலுமில்லை! - செ.ச.பிரபு. நெல்லை.
*தலையாட்டி வாழ்க்கை வெறும் வாழ்க்கை தன்மான வாழ்க்கை அரும் வாழ்க்கை தலையாட்டி வாழ்க்கைக்கு தலை மட்டும் போதும் தன்மான வாழ்க்கைக்கு தலைக்குள்ளும் வேண்டும் வேண்டுதல் வேண்டாமை அவரவர் தலைவிதி - நாகேந்திர பாரதி, சென்னை-24.
*ரப்பரும் பிளாஸ்டிக்குமாய் சந்தையிலிருக்கும் பொம்மைகள் ரத்தமும் சதையுமாய் ஆகிவிடுகின்றன குழந்தைகளை வந்தடைந்ததும். - மகா, திருப்பூர்.
|