ஜோக்ஸ்



‘‘வருமானத்துக்கு அதிகமா செருப்பு வாங்கி
வச்சிருந்தீங்களா?’’
‘‘ஐயா... நான் ஒரு அரசியல் தலைவர். அதெல்லாம்
தொண்டர்கள் என்மேல வீசினது!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘வரலாற்றை தலைகீழாக மாற்றியவர்
தலைவர்னு எதை வச்சு சொல்றே..?’’
‘‘புத்தகத்தை தலைகீழா
பிடிச்சிருக்கறத வெச்சுதான்!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.

‘‘பேரன்புத் தொண்டர்களே! இன்னும் சற்று நேரத்தில் நமக்குப் பிடித்த பிரியாணியும், பிடிக்காத தலைவரும் வரக்கூடும்
என்பதை அன்புடன்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

தத்துவம் மச்சி தத்துவம்

மற்றவர்களுக்கு சமையல் டிப்ஸ் கொடுக்கலாம்; ஆரோக்கிய டிப்ஸ் கொடுக்கலாம்; ஆனா ‘ஃபிங்கர் டிப்ஸ்’ கொடுக்க முடியுமா?
- விதம்விதமாக டிப்ஸ் கொடுத்தபடி காலத்தை
ஓட்டுவோர் சங்கம்
- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.

‘‘போதையில் இருந்த எங்கள் தலைவரை மேலும் ஒரு குவாட்டர் ஆசை காட்டி மதுவுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைத்துச் சென்ற கூட்டணிக் கட்சி
யினரை வன்மையாகக்
கண்டிக்கிறேன்!’’
- வி.சகிதா முருகன்,
தூத்துக்குடி.

2016 தேர்தலில் தலைவர் தனித்துப் போட்டியிடுவார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கட்சியில தற்சமயம் அவர் மட்டும்தானே இருக்கார்!
- அ.ரியாஸ், சேலம்.

ஆபரேஷனுக்கு அப்புறம் பார்வை எப்படி இருக்கு..?”
‘‘நர்ஸ் முகத்துல நாலு பரு இருக்கிறது
‘பளிச்’னு தெரியுது டாக்டர்..!
- அம்பை தேவா, சென்னை-116.