ஜோக்ஸ்



தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் கட்சிக்குன்னு ஒரு பாலிசி இருந்தாலும், அதுக்காக, அந்தக் கட்சியைக் கலைச்சிட்டா இன்சூரன்ஸ்ல
பணமெல்லாம் தர மாட்டாங்க!
- இன்சூரன்ஸ் ஏஜென்ட்டு
களையே இம்சிப்போர் சங்கம்
- ஜி.தாரணி, மதுரை.

‘‘தலைவர் தன்னோட சுய
சரிதையை யாருக்கு சமர்ப்பணம் பண்ணியிருக்கார்..?’’
‘‘அவர் பிறந்த ஊர்ல இருக்கற போலீஸ் ஸ்டேஷனுக்கு!’’
- அம்பை தேவா, சென்னை-116.

ஸ்பீக்கரு...

‘‘தலைவர் அவ்வப்போது அரெஸ்ட் ஆகி ‘உள்ளே’ போய்... தமிழகத்தை ‘அமைதிப் பூங்கா’வாக வைத்திருக்க உதவுகிறார் என்பதை உங்களால் மறுக்க
முடியுமா?’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘மாப்பிள்ளை வீட்டாரும் கொரியர் கம்பெனி வச்சிருக்காங்க, பொண்ணு வீட்டாரும் கொரியர் கம்பெனி வச்சிருக்காங்க...’’
‘‘அதுக்காக தாம்பூலத் தட்டை கொரியர்ல அனுப்பியா மாத்திக்குவாங்க..?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘சட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்குன்னு எப்படிய்யா சொல்றே..?’’
‘‘உங்களைக் கூட நிரபராதின்னு விடுதலை பண்ணியிருக்காங்களே தலைவரே!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘கூட்டம் ஃபுல்லா இருக்குன்னே... நாலே நாலு பேர்தானேய்யா இருக்காங்க?’’
‘‘அந்த நாலு பேரும் ‘ஃபுல்லா’ இருக்காங்க தலைவரே!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘ரொம்ப குண்டா இருக்கறதால ஜிம்முக்குப் போய் இளைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்யா...’’
‘‘உங்களுக்கு ‘ஒல்லி’மயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் தலைவரே!’’
- கே.ஆனந்தன்,
தர்மபுரி.