facebook



நம்முடைய செல்போனை வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் செல்லும்பொழுது பதற்றப்படாமல் இருக்க முடிந்தால் நாம் யோக்கியன்தான்!
- புவனேஷ்வர் சசி

‘‘கபாலி படக் கதை என்னோடது...’’ என்று என்னைக்கு ஒருவன் கோர்ட்டில் கேஸ் போடுறானோ, அன்றிலிருந்து ஆரம்பம் ஆகும் ‘கபாலி’ பட விளம்பரம்...
- சந்திரகாசன் சேர்மத்துரை

ஹாரன் அடித்தால் பெட்ரோல் சீக்கிரம் காலி ஆகிற மாதிரி, வண்டியில் ஒரு செட்டிங்ஸ் இருந்தா அருமையா இருக்கும்...
‪#‎ நாய்ஸ் பொல்யூஷன்‬ - இளையராஜா டென்டிஸ்ட்

விடியட்டுமென்று படுத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது, நாம் எழுந்திருக்கும் வரை வாழ்க்கையும் விடியாதென்று..!
- கருத்து கணேசன்

எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும்தான் பேசும்...
- யாழினி தேவி

பேசாம ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி எலெக்‌ஷன் வைக்கலாம்... கடைசி ஆறு மாசத்துலதான் இவங்களுக்கு மக்கள் ஞாபகம் வருது!
- திப்பு சுல்தான்

துவரம்பருப்பின் விலை சிக்கன் விலையை விட அதிகம் எனத் தெரிந்துகொள்ள வைத்தது புரட்டாசி.
- சம்பத் இளங்கோவன்

பெத்தவங்க இருக்கும்போது நிதி குடுக்காம, செத்த பின்னாடி திதி குடுக்குறதுதான் பெரிய பாவம்!
- செல் முருகன்

செமி ஆட்டோமேடிக் சமையல் என்பது ரெடிமேட் சப்பாத்தி, புரோட்டா, தோசை மாவை வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது!
- பிரபின் ராஜ்

ஒரு பைசா கூட ஊழல் இல்லாத ஆட்சியை பா.ம.க.வால் தரமுடியும்: அன்புமணி‬
# ஒரு பைசா செல்லாம போனதுகூட தெரியாம இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே சின்னய்யா!
- சக்திவேல் எம்

‘‘குற்றவாளி சட்டத்துல உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி வெளியில் வந்துட்டார்!’’‘‘அய்யய்யோ... அப்புறம்?’’
‘‘பஸ்ல இருந்த ஓட்டையில விழுந்து உயிர் போயிடுச்சி!’’
- ஹாஹா சிரிப்பானந்தா

அது என்னமோ தெரியல... ஹோட்டல்ல நமக்கு முன்னாடி கை கழுவுறவன்தான் 10 நாள் அழுக்கை ஒட்டுக்கா கழுவுவான். தியேட்டர்ல படம் போட்டவுடனே நமக்கு முன்னாடி நின்னுட்டுத்தான் சீட் தேடுவான். நம்ம டிசைன் அப்படி!
- ரகு ஏஏஆர்

twitter

@jksanmugas 
மனிதனை மன்னிப்பவன் பெரிய மனிதன் ஆகிறான்; மிருகங்களை மன்னிப்பவன் இளிச்சவாயன் ஆகிறான்...

@darlinretha 
ஒரு நபரிடமிருந்து இன்னொருத்தருக்கு மிக வேகமாகப் பரவும் நோய், கோபம்!

@Rajasirr 
போதி மரம்தான் நடவேண்டும் என்றில்லை, போதிய மரங்கள் நட்டால் கூட போதும்...

@nithil_an 
இங்க வந்து நாடு, சமூக வளர்ச்சி என கவலைப்படுறவங்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்... ‘‘யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை..?’

@HasinaBaanu 
ஆண்களுக்கான மாமியார் வெர்ஷன்தான் ‘மேனேஜர்’.

@sundartsp 
கூட்டம் சேர்க்கும் வரை உழைக்க வேண்டும், சேர்ந்த பின் அந்தக் கூட்டமே நமக்காக உழைக்கும்!

@SuganyaR1990 
உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் - வயித்து வலி.
# பள்ளிக் குழந்தைகள்

@ashik_twitz
சிவகார்த்திகேயனை தாக்கியது யார்? - விசாரணையைத் துவக்கிய கமல்...
# தட் மொமன்ட்!

@rajeev_s1 
பரீட்சையில முதல்ல வர்றவன் மனுஷன்... பரீட்சை ஹாலை விட்டு முதல்ல எந்திரிச்சு வர்றவன் பெரிய மனுஷன்!

@chella_ponnu 
எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கவேண்டுமெனில், நிலவாகத்தான் இருக்க வேண்டும், தனியா அந்தரத்துல தொங்கிட்டு!

@sundartsp 
விட்டா மெமரி கார்டை ஆதார் கார்டோடு இணைக்கச் சொல்லுவாங்க போல!

@Archana Archuu 
திருவள்ளுவரின் மனைவி போல ஒரே குரலுக்கு ஓடோடி வரவேணாம், கண்ணகி போல கணவனுக்காக நாட்டையே எரிக்க வேணாம், உப்புமா சமைக்காம
இருந்தால் போதும்!

@Arunleaks 
அடடா! நாட்ல நிறையா கார்டுங்க குடுக்காதீங்கடா. இங்க ஒருத்தன் ஏ.டி.எம் மெஷின்ல டெபிட் கார்டுக்கு பதிலா பேன் கார்டைப் போட்டு தேச்சிக்கிட்டு இருக்கான்...

@meenam makayal 
நாலு பொருள வாங்கிட்டு வாங்கன்னு கடைக்கு அனுப்பிச்சா, கடைல போயி நின்னு ‘‘என்ன வாங்கி வரச்சொன்னே?’’ன்னு போன் செய்யும் ஜீவனுக்கு
‘கணவன்’ என்று பெயர்.

@Arunvijith 
கெட்டவனோட சேர்ந்தா கெட்டுப் போறேன்னு சொல்றவங்க, நல்லவன் கூட சேர்ந்தா மட்டும் ஏன் நல்லவனா இருக்க மாட்டேங்கறாங்க?