ஆர்யாவோட எனக்கு ரொமான்ஸ்!



தமன்னா சொல்லும் சீக்ரெட்ஸ்

பார்பி பொம்மையின் லேட்டஸ்ட் வெர்ஷன் போல இருக்கிறார் தமன்னா. ஸ்லீவ்லெஸ்... நெக்லெஸ்... பேபி பிங்க் பிரைடல் கவுனில் ஜிவ்வென அவர் நமக்குக் கொடுத்த போஸ், கோடி பொன் பெறும்! ராஜேஷ் டைரக்ஷனில் ஆர்யா தயாரித்து நடிக்கும் ‘வி.எஸ்.ஓ.பி’ படத்தில் தம்ஸ்தான் ஹீரோயின். வெறும் போஸோடு விடலாமா? ஒரு ‘‘ஹாய்’’ சொல்லி, இனிதே துவக்கப்பட்டது ஒரு ஜாலி சாட்!‘‘காஸ்ட்யூமெல்லாம் ஸ்பெஷலா இருக்கே..!’’

‘‘யா... பாலிவுட்ல படங்கள் பண்ண ஆரம்பிச்ச பிறகு, அங்க நிறைய ஃபங்ஷன்ஸ் போக வேண்டியிருந்தது. அங்க லேட்டஸ்ட் ஃபேஷனுக்கும் டிசைனர் காஸ்ட்யூம்களுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. பிரமாதமான டிரஸ்ஸிங் சென்ஸ் இருந்தா, நம்ம லுக், ஸ்டைல் எல்லாம் பல மடங்கு அதிகமாகி அழகா தெரியும். எனக்கு ஃபேஷன்ல ஆர்வம் வரக் காரணமே அமீர் படேல்தான். ஃபங்ஷன்ல இருந்து படப்பிடிப்பு வரை என்னோட காஸ்ட்யூமை டிசைன் பண்றவர் அவர்தான்!’’

‘‘எவ்வளவு கேப் விட்டு சென்னை வந்தாலும், அதே ஃப்ரஷ்... அதே அழகு... எப்படி மெயின்டெயின் பண்றீங்க?’’‘‘உணவு விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். பாக்கெட் உணவுகளை என்னைக்கும் சாப்பிட்டதில்லை. மும்பை, சென்னை, ஐதராபாத்னு ஷூட்டிங்குக்காக எங்கே போனாலும் கையோட குக் ஒருத்தரை அழைச்சிட்டுப் போயிடுறேன். அடிக்கடி தண்ணி குடிக்கறேன். வீட்ல இருந்தாலும், வெளியூர்ல இருந்தாலும், டெய்லி ஜிம் வொர்க் அவுட் பண்றேன். அப்புறம் யோகா... இது போதுமே!’’

‘‘ஆர்யா படத்துல கமிட் ஆனது எப்படி?’’

‘‘ஆர்யாவோட நடிக்கற படம், ஒரு நைஸ் ரொமான்டிக் காமெடி. ஃபர்ஸ்ட் டைம் ஆர்யாவோட நடிக்கறேன். இப்போதான் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிருக்கு... படத்தைப் பத்தி இப்ப எதுவும் பேசுறதுக்கு இல்லை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தோட செகண்ட் வெர்ஷன்னு இதை நினைச்சிடாதீங்க. ரொம்பவே ஃப்ரஷ்ஷான ஒரு காமெடி ஃபிலிம் இது. சந்தானம் இருக்கார். ராஜேஷ் சார் சீன்ஸை சொல்றப்பவே அடக்க முடியாம சிரிச்சிடுறேன்... அப்படி ஒரு காமெடி கலவை உள்ள படம்! இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இதைப் பத்தி நிறைய பேசலாம்...’’

‘‘ராஜமௌலி இயக்குற ‘பாஹுபலி’யில என்ன ரோல்?’’

‘‘பீரியட் ஃபிலிம்ல முதல் தடவையா நடிச்சிருக்கேன். பிரமாண்டமான படம். எஸ்.எஸ்.ராஜமௌலி டைரக்ஷன்ல நடிச்சதே பிரமிப்பா இருக்கு. செட்ல ஒருநாள் கூட எனக்குப் பசியெடுத்தது இல்லை. அந்த அளவுக்கு வொர்க்ல, கேரக்டர்ல நமக்கு இன்வால்வ்மென்ட் வர வச்சிடுவார் ராஜமௌலி. அனுஷ்கா கூட எனக்கு அவ்வளவா காம்பினேஷன் இல்லை. இதுக்கு மேல படத்தைப் பத்தி பேச எனக்கு பர்மிஷன் கொடுக்கலை!’’

‘‘வாள் சண்டை கத்துக்கிட்டீங்களாமே?’’

‘‘யா... படத்தில் வாள் சண்டை இருக்கு... கத்துக்கலை. ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் சார் சொல்லிக் கொடுத்ததைப் பண்ணினேன். இப்ப நினைச்சாலும், இதையெல்லாம் நானா பண்ணினேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!’’‘‘தமிழ்ல நீங்க இல்லாத கேப்ல, ஹன்சிகா, சமந்தா, ஸ்ரீதிவ்யான்னு போட்டி அதிகமாகிடுச்சே...

’’‘‘நியூ கம்மர்ஸ் வர்றது நல்ல விஷயம்தானே. ஒரு படத்துக்கு மேக்ஸிமம் 65 நாள்தான் கால்ஷீட் கொடுக்க முடியும். எல்லா படமும் நானே நடிக்கறதும் சாத்தியமில்லையே... தமிழ்ல படங்கள் பண்ணாதபோது தெலுங்கு, இந்தியில பிஸியாகிடுறேன்!’’‘‘பாலிவுட்ல நீங்க நடிச்ச படங்கள் எதுவும் சரியா போகலையே...’’

‘‘நான் முதல்ல பாலிவுட்ல அறிமுகமாகிட்டுதான் தென்னிந்தியப் படங்கள்ல நடிக்க வந்தேன். அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எப்பவும் சகஜம்தான். இந்தியில நடிச்ச படங்கள் சரியா போகலைன்னு வீட்ல உட்கார்ந்திருக்க முடியுமா? அடுத்தடுத்து வொர்க்ல கவனம் செலுத்தறேன். சவுத்ல சக்சஸ்ஃபுல்லா இருக்கேன். எனக்கு இன்னும் வயசு இருக்கு... நிறைய ஹிட்ஸ் காத்திட்டிருக்கு... அதை நோக்கியே உழைச்சிட்டிருக்கேன்..!’’

‘‘தமிழ்ல நீங்க நடிக்க வரும்போது உங்களுக்கு மெயில் செக் பண்ணக்கூட தெரியாது. ஆனா, இப்போ ட்விட்டர்ல அப்டேட் பின்றீங்களே?’’‘‘உண்மை! முன்னாடி நான் இதிலெல்லாம் கவனம் செலுத்தினதில்லை. ட்விட்டர் பழகினதுக்குப் பிறகு, ஒரு விஷயம் புரிஞ்சது. ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு இது வரப்பிரசாதம். நடிக்க வந்த புதுசுல என்னைப் பத்தி வீண் வதந்திகள் பரவினா, உடனே அதை மறுக்கவோ, உண்மையைச் சொல்லவோ முடியாம இருந்துச்சு.

கிசுகிசு கிளம்புற நேரம் நாம மும்பையில இந்திப் பட ஷூட்டிங்ல மாட்டிக்கிட்டா அவ்வளவுதான். வந்து அதை க்ளியர் பண்றதுக்குள்ள ப்ராப்ளம் பெருசாகிடும். இப்போ அப்படி இல்லை. உலகத்தில் எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸ், ஃபேன்ஸ், மீடியா எல்லாரோடவும் டச்ல இருக்க முடியுது. ஒரு நடிகையா எனக்கு கட்டாயத் தேவை இந்த டெக்னாலஜி!’’

மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்