விடுங்க... வளர்ந்துடும்!



இரண்டே விரல்களால் ஓவியங்கள் வரைந்து அசத்தும் உதயகுமாரின் கதை நெகிழ வைத்தது. வாழ்வில் எதையும் சாதிக்க ஊனம் ஒரு தடையில்லை என்பதற்கு அவரே இலக்கணம்.
- எஸ்.நவீன்சுந்தர், திருச்சி.

நயன்தாராவுக்காக நம்ம ஊரில் எதை எதையோ இழக்க எவ்வளவோ பேர் தயாரா இருக்காங்க. நம்ம விஜய் சேதுபதி மீசை, தாடியைத்தானே ஷேவ் பண்ணியிருக்கார்? விடுங்க... வளர்ந்துடும்! - எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் சிறு துளிகளையே தந்திருந்தாலும் படிக்க மெய் சிலிர்த்தது. உடனே புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆவல் உந்துகிறது!
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

‘கல்யாணம் பண்ணிப்பார்... காரை வாங்கிப் பார்’ என புதுமொழியோடு, முதல் கார் வாங்க நினைப்பவர்களுக்கு பல தகவல்களைத் தெளிவுபடுத்தி அசத்தி விட்டீர்கள். நன்றி!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்

அன்னப்போஸ்ட்டில் தேவயானி டீச்சராகியிருப்பார் என்று பார்த்தால், லீவ் போஸ்ட்டிங்தானா? இப்போது அதுவும் இல்லையா... அடக் கடவுளே!
- வி.எஸ்.முத்தையா, கூத்தப்பாக்கம்.

64 ஆண்டுகளாக இந்தியாவின் அனைத்துத் திட்டங்களையும் உருவாக்கிய திட்டக் கமிஷனின் குறை நிறைகளை அலசி, ‘அது தேவையில்லை’ என்ற பிரதமரின் கருத்தை மக்களே பரிசீலிக்கச் செய்துவிட்டீர்கள். பலே!
- தேவிமைந்தன், சென்னை-83.

சும்மா சொல்லக் கூடாது... கள்ளக்காதல் பற்றிய சுவாரஸ்யத்தைவிட அதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கே... அது ஐ.நா. சபை வரை போகும் போலிருக்கே!
- ஆசை.மணிமாறன்,திருவண்ணாமலை.

பின்பலமாக சீனா இருப்பதால்தான் பரமசிவன் கழுத்து பாம்பு போல, தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து இந்தியாவுக்கு தொல்லை தருகிறது இலங்கை என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டீர்கள். நன்றி!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தெய்வீக அன்னை ‘மிரா’வின் சரிதம் ஆச்சரியங்கள் நிறைந்த தொடராய் வருகிறது. ‘நல்ல மனசும் செயல்களும் போதும் அன்னையை நெருங்க’ - அற்புத வரிகள்!
- மயிலை கோபி, சென்னை-83.

மூன்று வாரங்களாக வெளிவந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் மிக விரிவாக ஒவ்வொரு ராசியை யும் அலசியது. அதில் உள்ள முன்னெச்சரிக்கை வார்த்தைகள் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமைந்திருக்கும்!
- ஆசை.மணிமாறன்,திருவண்ணாமலை.