ஜோக்ஸ்



‘‘உடுத்தின டிரஸ்ஸோட உங்க பொண்ணை அனுப்புனா போதும்னு பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘நைட்டியோட அனுப்பிட்டாங்க..!’’
- மு.க.இப்ராஹிம், வேம்பார்.

‘‘நீங்கள் வேறு ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா..?’’
‘‘இந்த வழக்கு 2016ல் எனது வெற்றியைப் பாதிக்குமா யுவர் ஆனர்?’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவர் ஏன் ஜோசியர்கிட்ட போறாரு..?’’
‘‘முத்தப் போராட்டம் நடத்தினா தனக்கு சரியான ஜோடி கிடைக்குமான்னு கேட்கப் போறார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘ஒற்றனுக்கு எதற்கு மன்னா நூறு கசையடி தரச் சொல்கிறீர்கள்?’’
‘‘த்ரிஷா திருமண விஷயத்தை என்னிடம் சொல்லத் தவறி விட்டானே...’’
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘‘ஜோசியர் கிட்ட தலைவர் என்ன கேக்கறார்..?’’
‘‘கட்சி தாவும்போது எந்தக் கம்பெனி கார் வாங்கினா அரசியல் வாழ்வு பிரகாசமா இருக்கும்னுதான்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் பால் விலை ஏறி, பெட்ரோல் விலை இறங்கினாலும், ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரோட கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்தான் பண்ணுவாங்க. பெட்ரோல் அபிஷேகம் எல்லாம் பண்ண மாட்டாங்க!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஸ்பீக்கரு...

‘‘வாரம் 5 நாள் சுவையான சிக்கன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் பேசி, தலைவரைக் கைது செய்யத் துடிக்கும் ஜெயிலரை வன்மையாக
கண்டிக்கிறேன்..!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.