மழைத்தும்பிகள்
 *உன் பிரிவிற்குப் பிறகு உறுதியாக இருக்கிறேன் குளிக்கும்போது மட்டுமே என்னைத் தொடுகிறேன் *வேறு என்ன செய்ய... படித்துக் கொண்டிருக்கிறேன் எழுதியதை *பரவாயில்லை இன்றைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு நாளைக்குப் போ என்று சொல்ல எப்போதோ ஒருமுறைதான் உடல் அனுமதிக்கிறது *கணவாயில் நுழைகிறது மஞ்சு *அணைக்கட்டின் சுழலுக்கு நேர் உயரத்தில் சிறகசைக்காத மீன்கொத்தி *நீ போனபிறகு அம்மா குற்றம் சொல்கிறாள் நான் நீண்ட நேரம் குளிக்கிறேனாம் எனக்கு ஆறுதலாக அதைக் கொஞ்சம் திருத்தச் சொல் நீண்ட தூரம் என்று அறிவுமதி
|