facebook வலைப்பேச்சு



துடித்துக் கிடந்தவளின் வலியுணராமல்
வெறுமனே ஒருபோதும்
சொல்லிச் செல்லாதீர்கள்
இதுவும் கடந்து போகுமென...
 ஸ்ரீதேவி செல்வராஜன்

டாட்டா காட்டிவிட்டு
மகிழ்வோடு பள்ளி செல்லும்
குழந்தைகளைப் போல
டாட்டா காட்டிய நினைவு
பொத்தானில்லாத டவுசரை
இழுத்துப் பிடித்தபடி திரிந்த
என் பால்யத்தில் இல்லை...
 கௌதமன் டிஎஸ் கரிசல்குளத்தான்

பேய் மழை, இடி, காற்றுக்கு வாழை மரங்கள் கூட தப்பித்து விடுகின்றன; பன்மாடி குடில்கள் தரைமட்டம் ஆகிவிடுகின்றன!
 பிரபின் ராஜ்

கொன்றை மலர்கள் மேலே விழும்படி அதனடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை பார்க்கும்போதெல்லாம் அவை ஆசீர்வதிக்கப்பட்டவை போல தோன்றுகிறது...
 கண்மணி பாண்டியன்

இந்த உலகில் விலை மதிப்பில்லாதது ‘அன்பு’ மட்டும்தான்; ஏனோ அது விலையில்லாமல் கிடைப்பதால்
தான், அதன்
மதிப்பை யாரும்
உணர்வதில்லை...
 அ.அருண் மோகன்

சாதாரணமாக சொல்லப்படும் விஷயங்களை விட, ‘ரகசியம்’ என்று சொல்லப்படுபவை எளிதில் சென்றடைகின்றன!
 முரளி முனுஸ்

இந்த உலகில் தன் முன்பு எது நிகழ்ந்தாலும், இடைவிடாது செல்போனில் போட்டோ / வீடியோ எடுக்கிறவர்களைக் கேட்க விரும்புவது... ‘‘உங்களில் கால்வாசி பேராவது நீங்க எடுக்குற அந்த போட்டோ / வீடியோக்களை திரும்ப ஒருமுறையேனும் பார்க்கறீங்களா?’’
 ஈரோடு கதிர்

இன்னும் கிட்டவில்லை எதுவும்; அந்த நங்கூரம் கிழித்துக்கொண்டேயிருக்கிறது நீரை...
 ஃப்ராங்க்ளின்குமார்

ஹெல்மெட்
உங்கள்
தலைக்கு மட்டுமல்ல... உங்களை
நம்பி வாழும்
குடும்பத்துக்கும் பாதுகாப்பு!
சித்தன் கோவை

எல்லாருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிட்டிருக்குன்னு சொல்றாங்களே, அது எந்த மிருகம்னு ஜெயித்தவர்களைக் கேளுங்கள். அந்த மிருகம்தான் ‘முயல்’. முயற்சி செய்.
 இளையராஜா டென்டிஸ்ட்

கிரஹப்ரவேசம் பண்றோம்னு வீட்டுக்கு அட்ரஸ் குடுத்து வழி சொல்றவங்க அடையாளமா சொல்றது பிள்ளையார் கோயிலும் டாஸ்மாக்கும்தான்.
# ரெண்டுமே தெருவுக்கு நாலு இருக்கு!
 நிர்மலா ஸ்ரீதரன்

மரணம் என்ற ஒற்றை வார்த்தை புரட்டிப் போடும் குடும்பங்களின் சந்தோஷத்தை இவர்கள் தரும் இரங்கலும், சில லட்சம் நிவாரணமும் திருப்பித் தர வல்லதா?
 திவ்யா இசக்கி ராம்குமார்

twitter வலைப்பேச்சு

@RenugaRain
இப்ப முதல்வர், கொடநாடு, திருச்சி எல்லாம் போகும்போது, லீவ் அல்லது ஓடி ஸ்லிப் எழுதி வச்சுட்டு போவாங்களா?
# டவுட்டே!

@lakschumi   
புற உலகின் அடையாளங்கள் எல்லாம் தொலைத்த பின்னர் யாராக நாம் அறியப்பட வேண்டும்?!

 @ViZAYEN
 50 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டா இனிமே இங்க் ஃபில்லர்லதான் ஊத்துவாங்க போல.

@Revathy meenaksh
திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போனது அந்தக் காலம்; திருவிழாவே காணாமல் குழந்தைகள் இருப்பது இந்தக் காலம்!

 @sudarkodii     
புகையில்லாமல் தடமில்லாமல் ஓடும்
ரயில் வண்டி குழந்தைகளுடையது!

@arattaigirl
குயிலுக்கும் தன் குஞ்சு காக்கைக்குஞ்சு

 @g_for_Guru    
ஃபுட்பால் ஃபீவர் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு... வீட்ல சத்தமா பேசுனா யெல்லோ கார்டாம், கோவமா பேசுனா ரெட் கார்டாம்!!!
# சாப்பாடு.

@udanpirappe     
‘‘என்னய்யா பெட்ரோல் விலையும் ஏத்திட்டாய்ங்க’’ன்னு கேட்டா, பழக்கதோஷத்துல ஒருத்தன் ‘‘மோடி வரணும் சார்’’ங்கிறான்!
# டேய்

@MissLoochu  
சொல்லப்படாத வார்த்தைகளை சுமந்துகொண்டேயிருக்கிறது மனம்!

 @urs_priya      
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் பாராளுமன்றத்தில் அல்வா கிளறுவது மரபு
# செம்ம குறியீடு

@veenatalk
 எப்பவும் தோத்துக்கிட்டே இருக்கவனுக்கு தோல்வி மீது பயம் கிடையாது... எப்பவும் ஜெயித்துக்கொண்டிருப்பவனுக்குத்தான் தோல்வி பயம்!

@rajakumaari   
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது பல நேரங்களில் பொறாமை வரத்தான் செய்கிறது..!

@navi_n 
சில பெண்கள் அழகான ஆடை அணிகிறார்கள். சில பெண்கள் ஆடைக்கு அழகை அணிவிக்கிறார்கள்.

@singaporeprem79 
அந்தக் காலத்தில் ராஜராஜன் எந்த வசதியும் இல்லாமல் கட்டிய கட்டிடத்தின் நிழல்கூட கீழே விழுவதில்லை!
# இப்ப கட்டினால் கட்டிடமே விழுதேடா!