ஷாக்



‘‘அப்பாடா, ஒரு வழியா அந்த கான்ஸ்டபிள் கனகா வீட்டை காலி பண்ணிட்டா. தான் இருபது கொடம் தண்ணி பிடிச்சப்புறம்தான் மத்தவங்க தண்ணி பிடிக்கணும்னு அதிகாரம் பண்ணி, நமக்கு அரைக் குடம் தண்ணிகூடக் கெடைக்காமல் பண்ணிக்கிட்டிருந்தா. இனி அந்தத் தொல்லை விட்டது’’ என்று தெருப் பெண்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அப்போது வந்து நின்றது ஒரு முரட்டு பைக். அதிலிருந்து உருமலோடு இறங்கினார் வேறொரு லேடி இன்ஸ்பெக்டர்.

‘‘லேடீஸ், அந்தப் பெண் போலீஸ் காலி பண்ணிட்டுப் போன இந்த வீட்டை நான் வாங்கிட்டேன். அடுத்த வாரம் இங்க குடி வந்துடுவேன்!’’  கட்டைக் குரலில் அறிவித்தாள் அவள்
பெண்களுக்குத் திகில் கலந்த ஷாக். ‘நரி போய், புலியல்லவா வந்துவிட்டது?’அந்தப் புலி உடனே உறுமல் தணிந்து பேசியது...

‘‘தண்ணிக்கு வீட்டுல தனியா ஒரு குழாய் போடச் சொல்லி மாநகராட்சிக்கு அப்ளை பண்ணிட்டேன். இந்தக் குழாயடியில இனி சண்டை இருக்காது. பை தி வே... எங்க வீட்ல ரெண்டே பேர்தான். அதனால எங்க தேவைக்குப் போக மீதித் தண்ணியை நீங்க தாராளமா பிடிச்சுக்கலாம். இன்ஸ்பெக்டரம்மா வீடுன்னு பயப்படாம ஒரு ஃபிரண்டோட வீடுன்னு நெனைச்சி உள்ள வந்து பிடிச்சுக்கங்க!’’   

சுபமி