‘‘மதுரையிலயும் கோவையிலயும் கொள்ளையடிச்சது உன்னோட ஆட்கள்தானாமே..?’’
‘‘அதுக்கெல்லாம் அந்த அந்த ஏரியா ஸ்டேஷன்லயே மாமூல் கட்டியாச்சு எசமான்!’’
சரவணன், கொளக்குடி.
‘‘யாரங்கே..?’’
‘‘நீங்கள்தான் மன்னா அது! கண்ணாடி முன்னால்
நின்று கொண்டு இருக்கிறீர்கள்...’’
சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘மகளிரணிக் கூட்டத்துக்கு ஆவலாகப் போன தலைவர், ஏன் இப்படி அதிர்ச்சியாகி
திரும்பறார்..?’’
‘‘பெண்கள் எல்லாம் மேக்கப் இல்லாம
கூட்டத்துக்கு வந்திருந்தாங்களாம்..!’’
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தலைவர் தன்னை புழல்ல போடச் சொல்லி ஜட்ஜ் கிட்ட சொல்றாரே... ஏன்?’’
‘‘அந்த ஜெயிலோடதான் அவருக்கு ‘கெமிஸ்ட்ரி’ வொர்க் அவுட்
ஆகுதாம்..!’’
பர்வீன் யூனுஸ், சென்னை44.
‘‘பதுங்கு குழி ரொம்ப சின்னதாக உள்ளதே அமைச்சரே..?’’
‘‘என்ன செய்வது மன்னா... தாங்கள் குறுநில மன்னன்தானே!’’
சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘நர்ஸுக்கு சுடிதார் வாங்கிக் குடுத்தீங்களாமே... ஏன்?’’
‘‘யூனிபார்ம்ல அவங்க அழகு வெளிப்பட மாட்டேங்குது டாக்டர்..!’’
அம்பை தேவா, சென்னை116.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் அதிர்ச்சியான செய்தின் னாலும், ஒருத்தருக்கு இதயம் ‘சுக்கு நூறா’தான் உடையும். ‘இஞ்சி நூறா’ உடையாது!
எதையும் தாங்கும் இதயம் படைத்தோர் சங்கம்
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.