‘‘நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘வருமானவரி கட்டினதைக்கூட ‘மார்ச்சு வரி கட்டிட்டேன்’னு உளர்றாரே!’’
நா.கி.பிரசாத், கோவை.
‘‘கற்றாழை மின்சாரம்னு நம்ம தலைவர் ஏதோ புதுசா சொல்றாரே, அப்படின்னா என்ன?’’
‘‘காற்றாலை மின்சாரம்ங்கிறதைத்தான் போதையில அப்படி உளர்றார்..!’’
அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
‘‘காலையில நடக்க இருந்த ஏ.டி.எம். திறப்பு விழாவை ஏன் ரத்து பண்ணிட்டாங்க..?’’
‘‘யாரோ அதை முதல் நாள் ராத்திரியே ‘திறந்து’ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம்!’’
கி.ரவிக்குமார், நெய்வேலி.
‘‘மன்னர் இந்த வாட்டி புறமுதுகு காட்டி ஓடும்போது ராணிக்கு என்ன ஸ்பெஷல் கோபம்?’’
‘‘புதுசா சேர்ந்த அழகான பணிப்பெண்ணையும் கூட்டிக்கிட்டு ஓடறாரே..!’’
அம்பை தேவா, சென்னை116.
‘‘காத்து புக முடியாத இடத்துல கூட தலைவர் புகுந்துடுவார்...’’
‘‘கூட்டமா இருக்கிற டாஸ்மாக்ல குவாட்டர் வாங்கிட்டு வர்றதைப் பார்த்தாலே தெரியுது!’’
சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘முதல் மனைவி இருக்கும்போது எதுக்கு
இன்னொரு
கல்யாணம்
செஞ்சே..?’’
‘‘முதல் மனைவியைப் பார்த்தா இப்பல்லாம் பயமே வர்றதில்லை எசமான்...
அதான்!’’
சரவணன், கொளக்குடி.
ஸ்பீக்கரு...
‘‘அரசியலில் எனக்கு மேடை நாகரிகம் தெரியாது என்று கூறிய நாதாரி யார் என்று தெரிந்தால், அவனை செருப்பால் அடிப்பேன் என்பதை எச்சரித்துக் கூறிக் கொள்கிறேன்...
சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.